Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது
|
சிறப்புப் பார்வை
|
சிறுகதை
|
சூர்யா துப்பறிகிறார்
|
அலமாரி
|
அஞ்சலி
|
சின்னக்கதை
|
மேலோர் வாழ்வில்
எழுத்தாளர்
|
Events Calendar
|
நிகழ்வுகள்
|
வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Comments
Hari Krishnan
(India)
Comments Home
Comments by Hari Krishnan (37)
Article:
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-4)
Category:
மேலோர் வாழ்வில் (
Jan 2021
)
Posted On:
Jan 10, 2021
மிக நல்ல கட்டுரை. கடைசி இரண்டு வரிகளில் தெளிவில்லை. 1910ல் அரவிந்தரைத் தொடர்ந்து மாறுவேஷத்தில் வந்தது யார் என்பது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டும். 'லண்டலிருந்து' என்று சொல்லப்படுவதால், இது வவேசு ஐயரைக் குறிக்கிறது என்று உணர சற்றுப் பயிற்சி வேண்டும். (அடுத்த வாக்கியத்தில் வவேசு ஐயர் என்று சொல்லப்படுகிறதுதான். ஆனால் அடுத்த அடுத்த வாக்கியங்களில் வருவதால் லேசாகக் குழம்புகிறது. பா சு ரமணன் அவர்கள் கவனத்துக்கு.
Article:
பித்துக்குளி முருகதாஸ்
Category:
முன்னோடி (
Jan 2021
)
Posted On:
Jan 10, 2021
பா சு ரமணன், எப்போதும் போல அருமையானதொரு தொகுப்பைத் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி. பித்துக்குளி அவர்கள் அறுபது வயதில் திருமணம் செய்துகொண்டதைப் பற்றி அந்த நாளிலேயே சர்ச்சை எழுந்ததுதான். ஆனால் அவருக்குப் பணிவிடை மட்டுமே செய்யக்கருதிய அந்தப் பெண்மணியை அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருந்தால் இதே சமூகம் அவர்களிருவரையும் அபவாதத்துக்கு உட்படுத்தியிருக்கும் என்பதையும் நினைக்கவேண்டியிருக்கிறது.
Article:
சுபஸ்ரீ தணிகாசலம்
Category:
நேர்காணல் (
Jan 2021
)
Posted On:
Jan 03, 2021
1) இதிகாசங்களிலிருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்ற காரணத்துக்காகவே இசையைக்கூட தவிர்த்துவரும் நானே, இசைக்கு, அதுவும் திரையிசைக்கு மீண்டும் வசப்பட்டு, தொடர்ந்து ரசித்து வந்ததது சுபஸ்ரீ அவர்களின் QFR. தற்செயலாகத் தொடங்கி ஒரு habit ஆக வளர்ந்த நிகழ்ச்சி இது. அருமையான பேட்டிக்கு நன்றி. 2) இது தென்றலுக்கு. கருத்துச் சொல்லி காமெண்ட் போட்டால்தான் Rating கொடுக்க முடியும் என்றில்லாமல், Rating மட்டும் கொடுக்கும் வசதியை ஏற்படுத்தினால், கருத்தை வார்த்தைகளுக்குள் கொண்டுவர முடியாமல் தயங்குபவர்களும் பங்குபெற்று, Rating தர ஏதுவாகும். இதைத் தென்றல் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
Article:
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: சிவவேடனும் பாசுபதமும்
Category:
ஹரிமொழி (
Sep 2019
)
Posted On:
Dec 31, 2020
திரு சின்னசாமி: அஸ்திரங்கள் என்பவை ஆயுதமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அதிலும் பிரமசிரஸ் போன்ற அஸ்திரங்கள். இவை மந்திரம் உச்ரித்துச் செலுத்தப்படுபவை, பாசுபதம் தரும்போது சிவன் இதை (பாசுபதத்தை) வில்மூலமாகவும் எண்ணத்தின் மூலமாகவும் செலுத்தலாம் என்று சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். ஒருமுறை துரோணரிடமிருந்தும் ஒருமுறை பரமசிவனிடமிருந்தும் மந்திரோபதேசம் பெற்றுக்கொண்டான் என்று கொள்வது பொருத்தமாக இருக்கும்.
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
Category:
ஹரிமொழி (
Jan 2019
)
Posted On:
Dec 31, 2020
திரு சின்னசாமி: திரெளபதி, 'குருடனின் மகனும் குருடன்தானா' என்று கூறவில்லை. அது பி ஆர் சோப்ராவின் தொலைக்காட்சி மஹாபாரதத்தில் வரும் (ஹிந்தி) வசனம். இதை முன்னரேகூட 'சிரிக்காத சிரிப்பு' என்ற தலைப்பில் குறிப்பிட்டிருக்கிறோம். இங்கே பார்க்கவும்: http://tamilonline.com/thendral/article.aspx?aid=11229
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
Category:
ஹரிமொழி (
Jan 2019
)
Posted On:
Dec 30, 2020
திரு சின்னசாமி, தங்கள் கருத்துக்கு நன்றி. 'குருடன் மகனும் குருடன்தானோ' என்பது பி ஆர் சோப்ரா பாரதத்தில் இடம்பெற்ற திரிப்பு. வியாச பாரதத்தில் அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதையும் இதற்கு முன்னால் எழுதியிருக்கிறோம். 'சிரிக்காத சிரிப்பு' என்ற தலைப்பில் பார்க்கவும்.
Article:
ஹ்ரித்திக் ஜயகிஷ்
Category:
சாதனையாளர் (
Nov 2020
)
Posted On:
Nov 21, 2020
பாராட்டுரையைக் கேட்க முடியவில்லை. The video is unavailable. This video is private என்று வருகிறது. இது தென்றலின் எல்லைக்குட்பட்டது என்றால் இதைச் சரிசெய்து தருமாறு வேண்டுகிறேன்.
Article:
கவிமாமணி பா. வீரராகவன்
Category:
நேர்காணல் (
Jul 2020
)
Posted On:
Jul 09, 2020
வீரராகன் குறிப்பிட்ட அந்த கண்டக்டர் வேணு பாராட்டு விழா நடந்தபோது எனக்கு 18-19 வயது இருந்திருக்கும். அன்றுமுதல் இன்றுவரை இந்த மகத்தான கவிஞனை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். நல்ல ஆழமான கவிஞன். தென்றல் பத்திரிகை மூலமாக இந்தக் கவிஞனுக்கு பெரிய கௌரவம் கிடைத்திருப்பது குறித்து மகிழ்கிறேன். எல்லோருக்கும் அவர் கவிமாமணி, பல பட்டங்களைப் பெற்றவர். எனக்கு அவர் எப்போதும் வீருதான். வாழ்த்துகள் வீரு.
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பதின்மூன்று தேவ தினங்கள்!
Category:
ஹரிமொழி (
May 2018
)
Posted On:
May 22, 2018
'வெல்வது யாராக இருந்தாலும் தோலாடைகளை உடுத்துக்கொண்டு பன்னிரண்டு வருடம் வனவாசமும்...' என்று தொடங்கும் பத்தியிலும் அதற்கு அடுத்த பத்தியிலும் 'தோற்பது யாராக இருந்தாலும்' என்று இருந்திருக்கவேண்டும். கவனக் குறைவால் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறேன்.
Article:
லலிதாராம்
Category:
நேர்காணல் (
Jan 2018
)
Posted On:
Jan 06, 2018
மிகவும் சிறியவராக, இளைஞராகப் பார்த்த (நண்பர்கள் ராம்சி என்றழைக்கும்) லலிதாராம் இன்று மிகப் பெரிய காரியங்களைச் சாதித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இளம் சாதனையாளர்களைப் போற்றும் தென்றலுக்கு வாழ்த்தும் பாராட்டும் நன்றியும். ராம்சிக்கு ஆசிகள்.
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்"
Category:
ஹரிமொழி (
Dec 2017
)
Posted On:
Dec 06, 2017
மேலே 'பாம்பே, வங்கமொழிப் பதிப்பு' என்றிருப்பதை, 'பாம்பே, பெங்காலிப் பதிப்பு' என்று திருத்தி வாசிக்கவும். கவனக்குறைவால் நேர்ந்த பிழை.
Article:
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ
Category:
ஹரிமொழி (
Oct 2017
)
Posted On:
Oct 21, 2017
மிக்க நன்றி திரு ஸபஸா அவர்களே. வாசகர் ஒருவரி சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.
1
2
3
4
© Copyright 2020 Tamilonline