Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம் (பாகம் - 5)
- கதிரவன் எழில்மன்னன்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeமுன்கதை:

Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தக மானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவருமாகத் துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை:

ஷாலினியின் தந்தையின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்தி லிருப்பதாகக் கூறவே சூர்யாவின் திறமை யைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஷாலினியின் தந்தை அவருக்குச் சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். சூர்யா தன் யூகத் திறமையால் வெர்டியான் நிறுவனரான மார்க் ஷெல்ட்டனை வியக்க வைத்து அவர் பிரச்னையைத் தன்னால் தீர்க்க முடியும் என்று நம்ப வைத்தார்.

பிறகு மார்க் சூர்ய சக்திதான் சுத்த சக்தித் தொழில்நுட்பங்களிலேயே சிறந்தது என்பதால் அதை மேம்படுத்தப் பாடு படுவதாகக் கூறி அது ஏன் என்று விளக்க நான்கு வகை சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். முதலில் சிறிதும் மாசுபடுத்தாத நுட்பங்களைப் பற்றி விளக்க ஆரம்பித்தார்...

ஹைப்ரிட் மற்றும் முழுவதும் மின்சக்தியால் ஓடக்கூடிய வண்டிகளைப் பற்றியும், அணு சக்தியின் அனுகூல பிரதிகூலங்களைப் பற்றியும் அலசிவிட்ட மார்க் ஷெல்ட்டன், மற்ற துளிக்கூட மாசு வெளியிடாத நுட்பங்களைப் பற்றி மேற்கொண்டு விவரிக்கலானார். 'நான் இது வரைக்கும் சொன்ன நுட்பங்கள் மட்டுமல்ல, இன்னும் நிறைய உபவகை இந்த வகையிலயே இருக்கு. ஹைட்ரஜன் ப்யூயெல் ஸெல், பூமிக்கோள வெப்ப சக்தி (geo thermal), காற்று சக்தி, கடலலை சக்தி, மின்சக்தியை இன்னும் அதிகமாகத் தேக்கி வைக்கக் கூடிய பேட்டரிகள், போன்ற பல நுட்பங்கள் இந்த மாசு வெளியிடாத வகையைச் சார்ந்தவை.'

கிரண் ஆர்வத்துடன் படபடத்தான். 'ஹைட்ரஜன் நுட்பங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். அது வந்துட்டா சக்தித் தேவைப் பிரச்னையே தீர்ந்துடும், மாசே இருக்காதுன்னு பரபரப்பாப் பேசிக் கிறாங்களே? அதுல என்ன பிரச்னைங் கறீங்க? தீர்க்க முடியாதா?'

மார்க் மீண்டும் சோகமாகத் தலை யாட்டினார். 'அது முழுக்க வந்துட்டா ரொம்ப நல்லதுதான் கிரண். ஹைட்ரஜன் துறையில் நிறைய விஞ்ஞானிகளும், பெரிய நிறுவனங் களும் கூடத் தீவிர முயற்சிகள் செஞ்சுக் கிட்டுத்தான் இருக்காங்க. பெரிய கார் நிறுவனமான ·போர்ட், பில்லியன் டாலர் கணக்கில் இழப்படைந்து தடுமாறும் நிலையில் கூட, தன் எதிர்காலத்தையே ஹைட்ரஜன் கார்கள் மேல் பணயம் வச்சிருக்கு. அந்தப் பணயம் வெற்றி பெற்றால் அது ·போர்டுக்கு மட்டுமல்லாம, உலகத் துக்கே ரொம்ப நல்லதுதானே? அவங்க வெற்றி பெறணுங்கறதுதான் என் விருப்பமும் கூட. ஆனா அதுல இன்னும் நிறைய சில சிக்கல்கள் இருக்கு...'

முரளி தூண்டினார். 'அப்படி என்ன சிக்கல்? உலகத்துக்கு அவ்வளவு நல்ல துன்னா சந்திரனுக்கு ஆளனுப்பி காலடி பதிச்சா மாதிரி தீவிர முயற்சி செஞ்சு தீர்த்துட வேண்டியதுதானே?'

மார்க் மெல்லத் தலையசைத்துக் கொண்டு விளக்கினார். 'அது ஒண்ணும் அவ்வளவு சுலபமில்லை முர்லி. அந்தக் காலம் வேற. அப்ப அமெரிக்க அரசாங்கம் ரஷ்யாவோட போட்டி போட வேண்டிய கட்டாய வெறியில நிலாவுக்குப் போயே ஆகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு பலப்பல பில்லியன் டாலர்களை நாஸாவுக்கு அளவே இல்லாம அள்ளி வீசிச்சு. இப்ப, இந்த விஷயத்துல அப்படி கிடையாது. முதலாவது அரசாங்கமே பெரும் கடனாளியா நிக்குது. ரெண்டாவது, தற்போதைய அரசாங்கத்துக்குப் பெட்ரோலி யத்தை விட்டுத் தாண்டறத்துக்கு அவ்வளவு ஆர்வமில்லை. அரசாங்கப் பெரும் பெருச் சாளிகளே எண்ணை ஆளுங்கதானே! அரசு மாறினா வேணாப் பார்க்கலாம். அது வரைக்கும் தனியார் ஆராய்ச்சியில எவ்வளவு முன்னேற்றம் காண முடியுமோ அவ்வளவுதான் செய்யலாம்.'

சூர்யா யோசனையோடு வினவினார், 'சரி, ஆனா அந்த அளவு ஆராய்ச்சிகளிலேயே இப்ப இருக்கற நிலையைவிட மேல வளர்ந்திருக்கலாமே? ஏன் இன்னும் ஹைட்ரஜன் சக்தி அவ்வளவா முன்வரலை?'

மார்க் தலையாட்டினார். 'இது நல்ல கேள்விதான் சூர்யா. ஹைட்ரஜன் சக்தி துறையில நுட்பங்களில மட்டும் பிரச்னை யில்லை. உற்பத்தி, சேமிச்சு வைக்கறது, அங்கிருந்து வேண்டிய இடங்களுக்குக் கொண்டு போறது இது போல பலப்பல பிரச்னைகள் இருக்கு.'

முரளி குழப்பத்தோடு கேட்டார். 'மார்க், ஆனா, சில விமான நிலையங்களில ஹைட்ரஜன் சக்தியால பஸ்கள் ஓடுது, புகையே விடறதில்லை. நீராவிதான் விடுதுன்னெல்லாம் எதோ படிச்சேனே. அது என்ன...?'

பூமியின் மாசுப் பிரச்சனை பிரும்மாண்டமானது. எத்தனை மாசற்ற சக்தி நுட்பங்களை நாம் கண்டு பிடிச்சுப் பயன்படுத்தறமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுதான்.
கிரணும் குதித்தான். 'அதானே! ஹைட்ரஜன் எகானமி, ப்யூயெல் ஸெல் இது அதுன்னு நிறையப் படிச்சேனே. லேப் டாப்புகள், ஸெல் ·போன்கள் எல்லாத்துக் கும் கூட ஹைட்ரஜன் ·ப்யூயெல் ஸெல்லுல பேட்டரிகள், ரீ-சார்ஜர்கள் எல்லாம் வந்திருக்குன்னு படிச்சேன்? ·ப்யூயெல் ஸெல் கார்கள், ஹைட்ரஜன் எரிக்கற பஸ்கள் எல்லாம் ·போர்ட் நிறுவனம் தயாரிக்கு துன்னு கூடப் படிச்சேனே? ஆனா என்னவோ, நீங்க சொல்றதைப் பார்த்தா ஹைட்ரஜன் சக்தி வரத்துக்குள்ள எனக்குப் பேரன் பேத்தி வந்துடுவாங்க போலிருக்கே? உங்க சூரிய சக்திதான் சிறப்புன்னு நினைச்சு, அதை சும்மா மட்டம் தட்டறீங்களா?'

மார்க் விளக்கினார். 'சேசே, அந்த மாதிரியான சின்னப் புத்தி எனக்கில்லை. நீங்க ரெண்டு பேரும் சொன்ன மாதிரியான சில சிறு வெற்றிகள் இருக்கு. இல்லவே இல்லைன்னு சொல்ல வரல்லை. அங்கங்கே சிறிய அளவுல பரிசோதனை நிலையிலதான் நடந்துக்கிட்டு வருது. ஆனா, பொது ஜனங்கள் பயன்படுத்தற அளவுக்கான மாஸ் ப்ரொடக்ஷன் அப்படிங்கறாங்களே அந்த நிலைக்கு வந்து, அன்றாட வாழ்க்கைக்கான விலை கட்டுப்படியாகற அளவுக்கு வரத்துக்கு இன்னும் பலப்பல இடைஞ்சல்களைத் தாண்டியாகணும். அதுக்கு இன்னும் பலப் பல வருடங்களாகலாம், அதைத்தான் நான் சொன்னேன்.'

சூர்யா மீண்டும் யோசனையோடு தூண்டினார். 'ஓகே மார்க். இந்தப் புகை, மாசு எதுவுமே வெளிவிடாத முதல் வகையில இன்னும் பல வகை சக்திகள் இருக்கில் லையா? அதெல்லாம்?'
மார்க் பாராட்டினார். 'மீண்டும் ஒரு நல்ல கேள்வி. உங்க ஆழமான சிந்தனையைப் பாராட்டறேன். நீங்க சொல்றது சரிதான். இந்த வகையில இன்னும் பலவித நுட்பங்கள் இருக்கு. ஆனா, ஓவ்வொண்ணுக்கும் பல இடைஞ்சல்கள் இருக்கு. உதாரணமா காத்து சக்தியை எடுத்துக்குங்க. அதை வச்சு நிறைய மின்சக்தி உற்பத்தி செய்யணும்னா பெரிய காத்து ஆலைகளை வைக்கணும். ஆனா இப்பகூட சமீபத்துல, அமெரிக்காவுலயே, கடற்கரையில பெரிய காத்து மில்களை வச்சா எங்க இயற்கைக் காட்சி பாழா யிடுதுன்னு ஒரு கோர்ட் கேஸ் போட்டிருக் காங்க...'

கிரண் இடை மறித்தான். 'அட இவங்க கூட ஒரு மாடர்ன்-டே டான் கிஹோட் டேக்கள் போலிருக்கு! அவங்க கூட ஸாஞ்ச்சோ பாஞ்ச்சாவும் கோர்ட்டுக்கு வந்து விண்ட்-மில் மேல ஈட்டி பாய்ச்சறாரா?'

மார்க், கடற்கரை நில அதிபர்கள் குதிரை மேலேறி காற்று மில்களைக் ஈட்டிகளால் தாக்கும் காட்சியைக் கற்பனை செய்து பார்த்து உரக்கச் சிரித்தார். 'பிரமாதமான ஜோக் கிரண். அப்படியே வச்சுக்கலாம்.'

முரளி தன் பங்குக்குத் தூண்டினார். 'சரி, மற்ற மாசு வெளிவிடாத நுட்பங்கள்?'

மார்க் பெருமூச்சுடன் தொடர்ந்தார். 'ஹ¥ம்... என்னை விட்டா நான் ஒவ்வொரு மாசற்ற சக்தி நுட்பத்தைப் பத்தியும் ஒரு புராணமே படிப்பேன். அப்புறம் நாம மேல போகவே முடியாது. ஒவ்வொரு வகைக்கும் அனுகூலங் கள் இருக்கு, ஆனா பெரிய பிரதிகூலங்களோ அல்லது குறைந்த பட்சம் நிகழ்காலத் தடங்கல்களோ இருக்கு. என்னைப் பொறுத்த வரை, பூமியின் மாசுப் பிரச்சனை பிரும்மாண்டமானது. எத்தனை மாசற்ற சக்தி நுட்பங்களை நாம் கண்டு பிடிச்சுப் பயன்படுத்தறமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுதான். பூமியின் ஜனத் தொகை ஏற ஏற, இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் பொருளாதார முன்னேற்றம் அடைய அடைய, அவ்வளவு மாசற்ற சக்தி நுட்பங்களும் நமக்குத் தேவையாத்தான் இருக்கும். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. மற்ற நுட்பங்கள் இருக்குங்கறதுனால சூரிய சக்தி நுட்பம் மெதுவா வளருமானா பூமிக்கு அதுனால பெரும் நஷ்டந்தான். அது எவ்வளவு எளிதா பூமி பூரா கிடைக்குது, அதன் பலனை நாம் பயன்படுத்தக் கூடிய சக்தியா மாத்தறத்துக்கான தொழில் நுட்பங்கள் மற்ற வகைகளை விட கைக்கருகே இருக்கு; அது மட்டுமல்லாம, மற்ற வகை களைப் போலப் பெரும் பிரதிகூலங்கள் இல்லாம அனுகூலங்களே நிறைய இருக்கற நுட்பம் சூர்ய சக்தி நுட்பம். அதுனாலதான் நான் மாசு விடாத நுட்பங்களிலேயே கூட சூர்ய சக்தி மேல தீவிர ஆர்வமா வேலை செஞ்சுக் கிட்டிருக்கேன்.'

சூர்யா தலையாட்டி ஆமோதித்தார். 'ஒத்துக்கறேன் மார்க். மாசற்ற சக்தி நுட்பங்களில் சூர்ய சக்தி சிறந்ததுதான். ஆனா, எனக்கு மற்ற மாசு குறைவாக வெளியிடும் அல்லது வெளியிடப்பட்ட மாசைக் குறைக்கும் நுட்பங்களைப் பத்தியும் இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அவைகளைப் பத்திக் கொஞ்சம் சொல்லி டுங்க. அதுக்கு அப்புறமா உங்க சூர்ய சக்தி முயற்சியைப் பத்தி இன்னும் ஆழமாப் பேசலாம்.'

மார்க் குறைவாக மாசு விடும் எரிபொருள் நுட்பங்களைப் பற்றியும், மற்றும் வெளிவிடப்பட்ட மாசைக் குறைக்கும் சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றியும் மேற்கொண்டு விவரிக்கலானார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline