Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம் (பாகம் - 4)
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2007|
Share:
Click Here Enlargeஇதுவரை:

முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலித் தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர். முரளியின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறவே முரளி அவருக்குச் சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்துச் செல்கிறார். சூர்யா தன் யூகத் திறமையால் வெர்டியான் நிறுவனரான மார்க் ஷெல்ட்டனை வியக்க வைத்து அவர் பிரச்னையைத் தன்னால் தீர்க்க முடியும் என்று நம்ப வைத்தார். மார்க் ஷெல்ட்டன் சுத்த சக்தியைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்...

*****


பூவுலகச் சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும், அதே சமயம், ஏழை நாடுகளின் வளர்ச்சிக்குத் தேவையான சக்தியைத் தட்டுப்பாடின்றிப் பெறவும் சூரிய சக்திதான் ஏற்றது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அதையே தன் வாழ்க்கைக் கனவாகக் கொண்டு பாடுபட்டு வந்த மார்க் ஷெல்ட்டன், அந்த ஆழ்ந்த ஆர்வம் உந்திய உத்வேகத்தோடு சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

'சூர்யா, கிரண், முர்லி உங்களுக்கு சுத்த சக்தி ஏன் முக்கியமானதுன்னு ஏற்கனவே நல்லாத் தெரிஞ்சிருக்கு. எரிபொருட்களை அடிப்படையா வச்சு சுற்றுச் சூழலை நாம அழிச்சிக்கிட்டிருக்கற விதமும், உலக வெப்ப அதிகரிப்பினால் ஏற்பட்டு வர, இன்னும் ஏற்படப் போகிற தீய விளைவுகளைப் பற்றியும், அதிவேகமாக அதிகரித்து வரும் பெட்ரோலியத் தேவையினால உலகத்துல நடந்த, நடந்துக்கிட்டிருக்கும் போர்களைப் பற்றியும் உங்களுக்குத் தெரியாததை எதையும் நான் சொல்லிட முடியாது. ஆனா இதை யெல்லாம் எப்படி நிவர்த்திக்கறதுங்கறதைப் பற்றிப் பலர் எந்தெந்தக் கோணங்களில முயற்சி செய்யறாங்க, அதுல என் மனப்பாங்கு என்னங்கறதைப் புரிஞ்சுக்கறது நல்லது.'

ஒரு நொடி மூச்சு வாங்கிக் கொள்ள நிறுத்திய மார்க், மற்ற மூவரும் கவனிக் கிறார்களா என்று கூர்ந்து பார்த்துவிட்டு, அவர்கள் கவனமிருக்கும் திருப்தியுடன் தொடர்ந்தார். 'சுத்த சக்தி நுட்பங்களைப் பொதுவாக நான்கு வகையாப் பிரிக்கலாம்' என்று கூறிவிட்டு, கைவிரல்களை நீட்டி எண்ணிக் காட்டிக் கொண்டு விவரித்தார். 'முதலாவது, கரியமில வாயு வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளியிடும் தொழில்நுட்பங்கள். உதாரணமா, நான் வேலை செய்துவரும் சூரிய மின்சக்தித் துறை. மற்றும், மொத்தமாக மின்சாரத்தில் ஓடக் கூடிய அல்லது ஹைப்ரிட் கார் போன்ற தொழில்நுட்பங்கள்.

'இரண்டாவது, பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விட சுத்தமாக எரிபடக் கூடிய எரி பொருட்கள் (cleaner burning fuels). பயோ-டீஸல், எத்தனால் போன்றவை. மூன்றாவது, எரிபொருட்களை சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரேயளவு எரிபொருளுக்குப் பலமடங்கு அதிக அளவில் சக்தி அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of energy utilization). கடைசியாக, வெளியிடப்படும் மாசுகளான துகள்கள், திரவங்கள், வாயுக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் அல்லது பிடித்து மாசு செய்யாதவாறு அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration).'

நான்கு வகை நுட்பங்களைக் குறிப்பிட்டு நிறுத்திய மார்க், மற்ற மூவரும் புரிந்து கொண்டார்களா என்பது போல் கூர்ந்து பார்த்தார்.

கிரண் ஒரு சந்தேகம் கேட்டான். 'ஹ¥ம்... எங்க பங்கு வர்த்தக வட்டாரங்களில் இன்னொரு வகையைப் பத்திப் பேசிக் கறாங்களே. அதாவது, அரேபிய பெட்ரோலி யத்து மேல இருக்கற சார்பைக் குறைக் கறத்துக்காக, அமெரிக்காவிலயும், உலகத்துல மத்த இடங்களிலயும் இருக்கற பெட்ரோலிய படிமங்களைக் கண்டுபிடிக்க, அல்லது தெரிஞ்ச படிமங்களிலிருந்தே இன்னும் நிறைய பெட்ரோலியத்தை இன்னும் திறனோட குறைஞ்ச செலவில எடுக்கக் கூடிய மாதிரியான நுட்பங்கள்...'

மார்க் பொங்கி வந்த உஷ்ணத்தின் கொதிப்போடு இடைமறித்தார். 'கிரண், தயவு செஞ்சு இன்னொரு முறை அதை சுத்த சக்தியோடு சேர்த்துடாதே. அதை என்னால் தாங்கிக் கொள்ளக் கூட முடியாது. மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் வெனிஸ¤வேலா போன்ற சோஷலிஸ நாடுகளின் கெடுபிடி களினால் அமெரிக்காவும் மற்ற உலக பெரு நாடுகளும் (சைனா, இந்தியா உட்பட) பொருளாதார மற்றும் உலக அரசியல் சங்கடத்துக்குள்ளாகாமல் இருக்க அத்தகைய புது நுட்பங்கள் உதவலாமே ஒழிய, அது மாசுகள் குறையவும், சுத்தமாக்கப்படவும் ஓர் உதவியும் அளிக்காதவை. பார்க்கப் போனால், பெட்ரோலியத்தைச் சார்ந்த மாசு மிக்க எரிபொருட்களை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தவே உதவுகின்றன. அதனால் இந்த வகையறாவை அசுத்த சக்தி நுட்பம் என்றுதான் சொல்லணும்!'

கிரண் கைகளைத் தூக்கிக் காட்டிப் போலிச் சரணாகதி அடைந்தான். 'ஓகே, ஓகே, புரிஞ்சுடுச்சு, ஒத்துக்கறேன். பெட்ரோலியம் இஸ் அவுட், அசுத்தம், அசிங்கம். அதைப் பத்திச் சொல்ற எங்க வட்டார மடையன்களை அறைஞ்சுடறேன் அறைஞ்சு. நீங்க சொன்ன வகையறாக்களைப் பத்தியே இன்னும் விவரமா சொல்லுங்க.'

மார்க் மேலும் விவரிக்கலானார். 'முதல்ல சொன்னது கரியமில வாயுவை வெளிவிடாத சக்தித் தொழில்நுட்பங்கள். இதுல சூரிய சக்தி உன்னதமானது. அதைப் பத்தி அப்புறம் விவரமா சொல்றேன். இப்போதைக்கு மற்ற விதங்களைப் பத்தி சொல்லிடறேன். உதாரணமா, முழுவதும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளைக் குறிப்பிடலாம். தற்போது ஏற்கனவே ஹைப்ரிட் எனப்படும் பேட்டரியில் மின்சார மோட்டார், கேஸலின் எரித்து ஓட்டும் மோட்டார் இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகிக்கும் வண்டிகள் பிரபலமாகி உள்ளன. அதே மாதிரி வண்டிகளுக்கு, வீட்டு மின்சாரத்தினால் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரித் தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. வருங்காலத்தில் முழுமையாக மின்சாரத்திலேயே ஒடக்கூடிய வண்டிகளும் தயாரிக்கப் பட்டுள்ளன.'
கிரண் துள்ளிக் குதித்தான். 'ஆஹா! நாங்க இங்க வரத்துக்கு முன்னாடியே டெஸ்லா மோட்டரின் அதிவேக முழு மின்வண்டியைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தோமே!'

மார்க் தலையாட்டி ஆமோதித்தார். ஆனால் சூர்யா எதோ ஆழ்ந்த எண்ணத்தோடு மறுப்பது போல் தலையசைக்கவே முரளி அவரைக் கேள்விக் குறியோடு பார்த்தார். 'என்ன சூர்யா, நீங்க ஒத்துக்கலை போலிருக்கு. புகையே துளிக்கூட விடாத வண்டி நல்லதுதானே?'

சூர்யா தன் சந்தேகத்தை விளக்கினார். 'வண்டி புகையே விடாதது நல்லதுதான். ஆனா மின்சாரம் தயாரிக்கறதுல கரி, பெட்ரோலிய எண்ணை போன்ற எரி பொருட்களைப் பயன்படுத்தறதுனால நிறைய மாசு வருதுங்கறாங்களே...'

மார்க் உற்சாகத்தோடு ஆமோதித்தார். 'அற்புதமான கேள்வி. இப்போதைய நிலைமைக்கு ரொம்ப சரிதான். ஆனா அதை மாத்தி சுத்த சக்தி நுட்பங்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப் படுதீவிர முயற்சிகள் செய்யறதுனால, சில வருஷங்களில இது மாறி மின்சார சக்தியில ஓடறது பெரும்பாலும் சுத்த சக்தியாலன்னு சொல்லக்கூடிய அளவுக்கு மெல்லப் போவோம். இன்னும் பல வருஷங்களுக்கப்புறம், நான் சொன்ன கார்பன் அடைப்பு போன்ற மற்ற நுட்பங்களினாலும், சூரிய சக்தியிலிருந்தும், மொத்தமா, நூறு சதவிகிதம் சுத்தமா மின்சக்தி உற்பத்தி செய்யவும் வாய்ப்பிருக்கு. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. என்னால ஆன வரை நானும் முயற்சிப்பேன்.'

முரளியும் தன் பங்குக்கு வினாவினார் 'மார்க், அதுக்கு அணுசக்தி கூடப் பயன் படுத்தலாம் இல்லையா?'

மார்க் மெல்லத் தலையாட்டினார். 'சரி முர்லி, அணுசக்தியையும் கூட இந்த வகையில் குறிப்பிடலாம். முக்கியமாக, பெட்ரோலியம் மற்றும் கார்பன் சார்ந்த எரிபொருட்களின் மேல் தங்களுக்குள்ள சார்பைக் குறைப்பதற் காக இந்தியாவும் சைனாவும் அணுசக்தித் துறையில் மிகப்பெரும் கவனம் செலுத்தறாங்க. ஆனால், அணுசக்தித் துறையில் இன்னும் ரெண்டு பெரிய கேள்விக்குறிகள் தீராம இருக்கு: சக்தி உற்பத்திக்குப் பிறகு எப்படி கதிர்வீச்சுக் கழிவுப் பொருட்களை (radioactive waste) தீய விளைவின்றிப் பாதுகாப்பாக வைப்பது? ரெண்டாவது, 3-மைல் தீவு, செர்னோபில் போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் எப்படித் தடுப்பது? இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க ஆராய்ச்சிகள் செஞ்சுக்கிட்டிருக்காங்க. அதுமட்டுமல்லாமல், அணுப்பிளவுக்குப் (nuclear fission) பதிலாக, சூரியசக்திக்கு மூலகாரணமான அணுச் சேர்க்கை (fusion) சக்தி சுத்தமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு, அந்தத் துறையிலும் ஆராய்ச்சி நடந்துக்கிட்டிருக்கு.'

கிரண் உற்சாகத்தோடுத் துள்ளினான். 'அப்புறம் என்ன?! சின்ன சின்ன சூரியன் மாதிரி நிறைய ·ப்யூஷன் ரியாக்டர்கள் வச்சு ஜமாய்ச்சுடலாம் இல்லையா? ராத்திரி பகல்னு 24 மணி நேரமும் சூரிய சக்தின்னு வச்சுக்கலாமே? எதுக்கு சூரிய ஒளி, வெப்பம், பேட்டரின்னு கஷ்டப் படணும்?'

மார்க் சோகத்துடன் புன்னகைத்தார். 'அவ்வளவு சுலபம்னா பரவாயில்லையே. நானும் அக்கடான்னு அந்தத் துறையிலேயே இருந்திருக்கலாம். ஆனா, நிலைமை என்னன்னா, அது ரொம்ப ரொம்பக் கஷ்டமா இருக்கு. பல பத்தாண்டுக் காலங்களா ஆராய்ச்சி செஞ்சும் இன்னும் பாதுகாப்போடு, சக்தி நஷ்டமில்லாம ·ப்யூஷன் சக்தி உற்பத்தி செய்ய முடியலை. பல விஞ்ஞானிகளுக்கு அந்த மாதிரி செய்ய முடியுமாங்கற நம்பிக்கையே போயிடுச்சு.'

சூர்யா அதைச் சார்ந்த மற்றொரு கேள்வி கேட்டார். 'குளிர் அணுச்சேர்க்கைங் கறாங்களே (cold fusion) அது செய்ய முடியும்னு எங்கயோ படிச்சேனே...'

மார்க் களுக்கென்று சிரித்துவிட்டார். 'ஸாரி சூர்யா. உங்களைக் கேலி செய்யணும்னு சிரிக்கலை. சில வருஷங்களுக்கு முன்னால ரெண்டு விஞ்ஞானிங்க அந்தத் துறையில வெற்றி கண்டதா பித்தலாட்டம் செஞ்சது ஞாபகம் வந்துடுச்சு, அதான் அடக்க முடியாம சிரிச்சுட்டேன். குளிர் ·ப்யூஷன் செய்ய முடியக் கூடுந்தான். ஆனா பல விஞ்ஞானிகள் அந்த நுட்பம் சரியாக வரவும் மிக அதிக நாளாகும், வந்தாலும் அதிக சக்தி வருவது சந்தேகம்னுதான் நினைக்கறாங்க. அது வரணும்னுதான் என் விருப்பம். ஆனா அதுவரைக்கும் நாம காத்திருக்க முடியாது. இப்பவே எதாவது செஞ்சாகணும். சூரிய ஒளி மற்றும் வெப்பசக்தி இப்பவே அபரிமிதமா கிடைக்குது. பயன்படுத்தவும் நுட்பம் இப்பவே இருக்கு' என்று கூறிவிட்டு மற்ற சுத்த சக்தி நுட்ப வகைகளைப் பற்றி விவரிக்கலானார்...

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline