Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
jeyakumar srini (Qatar)

Comments Home
Comments by jeyakumar srini (8)
Article: அரவணைப்பாள் அன்னை
Category: சிறப்புப் பார்வை (Jun 2008) Posted On: Jun 07, 2008
ஓம் ஸ்ரீ அமிர்தேஷ்வர்யை நமக. அம்மாவின் புகழை எடுத்தியம்பாத இதழ்களே இல்லை எனக்கூறும் அளவுக்கு அவரது புகழ் அண்டம் முழுதும் பரவியுள்ளது. அவரது மதுரை பிரம்மஸ்தான கோவிலுக்கு அடிக்கடி சென்று வருடம் ஒருமுறை அம்மாவின் தரிசனம் மற்றும் அன்பைப் பெற்றிருக்கிறேன். உலகமெலாம் ஒரே மக்கள் என்ற உலகளாவிய அன்பு கொண்டது அம்மாவினுடையது. அம்மா நீடுழி வாழ இந்த எளியவனின் பிரார்த்தனைகள். ஜெயக்குமார்

Article: தாழ்மரமும் கொடியும்
Category: ஹரிமொழி (Dec 2007) Posted On: Mar 25, 2008
//ஆசை என்னும் கொடி என்பது, உள்ளத்தை நிறைத்துப் பல்கிப் பெருகிக் கிளைகளாக ஓடுவது என்றும்; தாழ்மரம் என்பது, அப்படிக் கொடி ஓடாமல் ஏரியின் மதகை அடைப்பதற் காகப் பயன்படும் பலகை அல்லது shutter என்றும் புலப்படுகிறது. பெருக்கெடுக்கும் ஆசை, வழிந்தோடும் ஆசை மேலும் பெருகாமல், மேலும் சிந்தி, வழிந்து ஓடாமல் தடுத்து நிறுத்தும் தாழ், குரு.// எல்லோருக்கும் புரியும்விதமாக மிக அருமையாக விளக்கியுள்ளீர் அய்யா. கொஞ்சம் கஷ்டப்பட்டால் பாரதியின் கவிதைகளுக்கு எவ்வளவு பொருள் அருமை அருமை. நன்றி அய்யா.

Article: மார்ச் 2008 : வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Mar 2008) Posted On: Mar 22, 2008
ஒரு மின் இதழ் இவ்வளவு சுவாரசியமாய் இருக்கமுடியுமா என ஆச்சரியப்படுத்துகிறது தென்றல். நிறைய விஷயங்கள் படிக்கக் கிடைக்கிறது. ஹரிகிருஷ்ணன் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் கட்டுரைகளை படிக்க படிக்க புதுப்புது தகவல்களை வழங்கும் பொக்கிஷமாய் இருக்கிறது. தொடர்ந்து வீசி குளிர்விக்கட்டும் தென்றல்... வாழ்த்துக்களுடன்.. ஜெயக்குமார், கத்தர்

Article: டாக்டர் அலர்மேலு ரிஷியின் "கம்பராமாயணமும் இராம நாடகக் கீர்த்தனையும்"
Category: நூல் அறிமுகம் (Mar 2008) Posted On: Mar 22, 2008
நல்ல நூல் விமர்சனம். அனுமன் வார்ப்பும் வனப்பும் எழுதிய ஆசிரியர் இந்த நூலுக்கு அணிந்துரை செய்திருப்பது விமர்சனத்தின் மீதான நம்பகத்தன்மையை கூட்டுகிறது. //சேது கட்டுவதற்காக மண்சுமந்த அணில் கதை வான்மீகம், கம்பன் இரண்டிலும் இல்லை; ராம நாடகக் கீர்த்தனையில் இருக்கிறது என்று ஒரே ஒரு வரி எழுதுதற்குப் பின்னால் எவ்வளவு கடினமான உழைப்பு தேவைப் படும் என்பதை விளக்கவே தேவை இல்லை.// இதுபோல விமர்சனம் செய்ய ராம காதையில் ஆழ்ந்த புலமையும் பயிற்சியும் கொண்டோராலே மட்டுமே செய்ய இயலும். வாய்ப்புக்கிடைக்கும்போது தேடிப்படிக்கவேண்டும் என்ற என்னத்தை உண்டாக்கியுள்ளது உங்கள் விமர்சனம்.

Article: பற்றி இறுக்காத பற்று
Category: ஹரிமொழி (Mar 2008) Posted On: Mar 15, 2008
//ஆனால், இழை எங்கே தவறியது என்றால், அந்த மான்குட்டி வளர்ந்து, தன்னைத் தானே பார்த்துக் கொள்ளக்கூடிய வயதும் வளர்ச்சியும் அடைந்த பின்னரும்கூட அதை விடாமல் இறுகப் பற்றியபடி, 'இது என் மான்; நான் வளர்த்த மான்; என்னைத் தஞ்ச மடைந்த மான்' என்றெல்லாம் உணர்வுகள் கிளர்ந்து எழ அனுமதித்து, அந்த உணர்வு களின் பின்னால் தன்னைச் செலுத்திக் கொண்ட அந்த இடத்தில்தான் பிறழ்ச்சி ஏற்பட்டது.// இது புதிய தகவலும் அதே சமயம் உண்மையானதும் கூட.. //ஆக, எதை விடுவது எதைப் பிடிப்பது என்பதை ஒருவாறாகப் பிடித்துவிட்டோம் இல்லையா?// ஆமாம். நல்ல கட்டுரை.. நல்ல கருத்துக்களுடன் ஒரு ஒப்பாய்வு செய்திருக்கிறீர்கள். நன்றி அய்யா

Article: சுஜாதா: ஒரு சகாப்தத்தின் மறைவு
Category: அஞ்சலி (Mar 2008) Posted On: Mar 15, 2008
நல்ல அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள் சுஜாதாவிற்கு.. அவரது முக்கியமான படைப்புகளை எடுத்துக்கூறி அவரை மறு அறிமுகம் செய்த்துவைத்திருக்கிறீர்கள் புதிய தலைமுறைக்கும் அவரை சரியாகப்படிக்கதவர்களுக்கும்.. எழுத்துக்களில் அவர் நம்முடன் என்றும் வாழ்வார்.

Article: வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழா
Category: நிகழ்வுகள் (Feb 2008) Posted On: Feb 09, 2008
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழா என்றதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வளைகுடா நாடுகளைப் பற்றிய கட்டுரையோ என நினைத்தேன். இங்கும் பொங்கல் விழா மிக மிக சிறாப்பாக நடந்தேறியது. சாதகப்பறவைகள் இசைக்குழு வந்திருந்தனர். குழந்தைகள் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் அருமையாக நடந்த விழா பொங்கல் விழா.. இந்தியர்கள் என்கு சென்றாலும் தமது பாரம்பரிய விழாக்களை விடாமல் தொடர்ந்து செய்து தமது வேர்களை நினைவு கூறுவது பாராட்டத்தக்கதே. ஜெயக்குமார்- தோஹா-கத்தார்

Article: தாழ்மரமும் கொடியும்
Category: ஹரிமொழி (Nov 2007) Posted On: Feb 09, 2008
நல்ல கட்டுரை ஹரி அய்யா. திருக்குறளை புதிய கோனத்தில் பார்க்கிறோம். அர்த்தம் என்னவாய் இருக்கும்?? ஏன் அப்படி சொல்லப்பட்டிருக்கும் என ஆவலாய் இருக்கிறேன். ஜெயக்குமார்

© Copyright 2020 Tamilonline