Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
- |டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeநவம்பர் 5, 2009 அன்று பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் ர. விஜயலட்சுமி அவர்கள் டவுன்செண்ட் திறனாய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.பௌத்தம், சமணம், ஆசீவகம் எனும் முப்பெருஞ்சமயக் கோட்பாடுகளால் தமிழகத்தில் விளைந்த மாற்றங்களை விளக்கினார் முனைவர் விஜயலட்சுமி. அவரது உரையின் சாரம் இது: காலத்தால் முற்பட்ட சங்கப் பாடல்கள் விவரிக்கும் சமூகப் பின்னணியில் இம்மூன்று சமயத்தினரும் வருகை தந்தனர். பௌத்தர்களும் சமணர்களும் வினைக்கொள்கையை வலியுறுத்தி அறநெறி, புலனடக்கம், தவம், வீடுபேறு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தினர். ஆசீவகர்கள் ஊழ் அல்லது விதிக்கொள்கையை நம்பினர். இவர்கள் வருகையால் தமிழர் வாழ்விலும் பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றிலும் பெருமளவு மாற்றங்கள் உண்டாயின.

சங்கமருவிய காலத்தில் எழுந்த மணிமேகலை பௌத்த சமயக் கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டது. மணிமேகலை துறவினைச் சாத்தனார் பௌத்த சமய நூல்கள், ஜாதகக்கதைகள், தேரிகாதா எனும் புத்த பிக்குணிகளின் பாடல்களின் தொகுப்பு ஆகியவற்றை மனத்திற் கொண்டு புனைந்திருக்கிறார்.
நாயன்மார், ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தினால் நலிவுற்ற சமணசமயத்தினர் தமிழ் மக்களைத் தம்பால் ஈர்க்கும் நோக்குடன் சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி ஆகிய காப்பியங்களை இயற்றினர். வடமொழி மகாகாவிய மரபும் தமிழிலக்கிய மரபும் ஒருங்கமைந்த புதியதோர் காப்பிய வடிவை இதன்மூலம் அவர்கள் தமிழுக்கு அளித்தனர். சிந்தாமணியின் இலக்கியச் சிறப்பால் கவரப்பட்ட குலோத்துங்க சோழனைச் சைவநெறியில் திருப்பும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது சேக்கிழாரின் 'பெரியபுராணம்'. சைவ, வைணவ சமயங்களின் தாக்கத்தினால் பௌத்த, ஆசீவக சமயங்கள் தமிழ்நாட்டிலிருந்து மறைந்துவிட்ட போதும், பௌத்த, சமண சமயத்தினர் தமிழ் நாட்டில் செல்வாக்குடன் விளங்கியதற்கு அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் தமிழகம் எங்கும் காணக் கிடைக்கின்றன என்று உரையாளர் குறிப்பிட்டார். விஜயலட்சுமி அவர்களின் உரை ஏறக்குறைய நாற்பது ஆண்டு ஆய்வு முயற்சிகளின் வெளிப்பாடு ஆகும்.
More

கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
அபிநயா நடனக் குழுமத்தின் 'நிருத்ய சங்கதி'
CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
சிகாகோவில் தீபாவளி விழா
TAGDV திருவிழா தினம்
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
அரிசோனா தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
லெமாண்ட் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டித் திருவிழா
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தீபாவளி விழா
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
தென் ஃப்ளோரிடா தமிழ்ச் சங்கத்தில் தேனிசை மழை
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் விவாத அரங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline