Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அவதார்ஸ் வழங்கும் நினைத்தாலே நடக்கும்
உதவும் கரங்கள் நிதிக்காக 'கலாட்டா-2008'
கலி·போர்னியா பல்கலை (பெர்க்கலி) ஏற்பாடு செய்யும் நான்காவது தமிழ்ப்பீட மாநாடு
சுவாமி சுகபோதானந்தாவின் 'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை
- ஷகிலா பானு .N|மார்ச் 2008|
Share:
Click Here Enlarge'வெற்றியின் படிகள்' என்ற செயல் பட்டறை ஒன்றை மார்ச் 22, 2008 அன்று மாலை 6 மணியிலிருந்து 9 வரை ஏற்பாடு செய்துள்ளனர். Ever Green, 3111 Vinifera dr, San Jose, CA95135 என்ற முகவரியில் இது நடைபெறும்.

வெற்றிக்கும், திருப்திக்கும் வழிகாட்டும் வகையில் இந்தச் செயல்பட்டறையை சுவாமி சுகபோதானந்தா அவர்கள் வடிவமைத்துள் ளார்கள். சுவாமி சுகபோதானந்தா அவர்களிடம் தீவிரப் பயிற்சி பெற்ற அவரது மாணவர்கள் இதை நடத்துகிறார்கள்.

இந்தப் பயிற்சிக் கூடம், ஜப்பானியர்களின் கைசான் கொள்கைப்படி, இன்று புதிதாகப் பிறக்கும் இந்த நாள் நமக்கு நேற்றை விட அதிகப் படியான மகிழ்ச்சியையும், அன்பையும், நம்பிக்கையையும், கொடுத்து வாழ்க்கையில் சரியான ஏணிப்படியில் மேலேறிச் செல்ல வழிகாட்டுகிறது. பல தொடக்க நிலை தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் இந்தப் பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளலாம். பல எளிதான ஆனால் மிகவும் ஆழமான உத்திகள் மூலம், இந்தப் பயிற்சியில் பெற்ற மனத்தெளிவை எப்படி மேன்மேலும் வளர்த்துக் கொள்வது என்ப தையும் கற்கலாம். சுவாமி சுகபோதானந்தா அவர்களின் பிற பயிற்சிகளைப் போலவே, வாழ்க்கையில் உற்சாகத்தையும், ஆழத்தை யும் ஒரே நேரத்தில் தந்துவிடுகிறது.

முன்னர் இதே நிகழ்ச்சி சன்னிவேல் கோமள விலாஸில் ஜனவரி 19, 2008 அன்று சிறப்பாக நடந்தேறியது.

இந்தப் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. பிரசன்னா டிரஸ்டிற்கு நன் கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
தொடர்புகொள்ள:
அபர்ணா: 408.223.7578
சிவா: 408.329.0125
toshakila@gmail.com
aparna_sraju@yahoo.com

N. ஷகிலா பானு
More

அவதார்ஸ் வழங்கும் நினைத்தாலே நடக்கும்
உதவும் கரங்கள் நிதிக்காக 'கலாட்டா-2008'
கலி·போர்னியா பல்கலை (பெர்க்கலி) ஏற்பாடு செய்யும் நான்காவது தமிழ்ப்பீட மாநாடு
Share: 




© Copyright 2020 Tamilonline