சுவாமி சுகபோதானந்தாவின் 'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை
'வெற்றியின் படிகள்' என்ற செயல் பட்டறை ஒன்றை மார்ச் 22, 2008 அன்று மாலை 6 மணியிலிருந்து 9 வரை ஏற்பாடு செய்துள்ளனர். Ever Green, 3111 Vinifera dr, San Jose, CA95135 என்ற முகவரியில் இது நடைபெறும்.

வெற்றிக்கும், திருப்திக்கும் வழிகாட்டும் வகையில் இந்தச் செயல்பட்டறையை சுவாமி சுகபோதானந்தா அவர்கள் வடிவமைத்துள் ளார்கள். சுவாமி சுகபோதானந்தா அவர்களிடம் தீவிரப் பயிற்சி பெற்ற அவரது மாணவர்கள் இதை நடத்துகிறார்கள்.

இந்தப் பயிற்சிக் கூடம், ஜப்பானியர்களின் கைசான் கொள்கைப்படி, இன்று புதிதாகப் பிறக்கும் இந்த நாள் நமக்கு நேற்றை விட அதிகப் படியான மகிழ்ச்சியையும், அன்பையும், நம்பிக்கையையும், கொடுத்து வாழ்க்கையில் சரியான ஏணிப்படியில் மேலேறிச் செல்ல வழிகாட்டுகிறது. பல தொடக்க நிலை தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் இந்தப் பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளலாம். பல எளிதான ஆனால் மிகவும் ஆழமான உத்திகள் மூலம், இந்தப் பயிற்சியில் பெற்ற மனத்தெளிவை எப்படி மேன்மேலும் வளர்த்துக் கொள்வது என்ப தையும் கற்கலாம். சுவாமி சுகபோதானந்தா அவர்களின் பிற பயிற்சிகளைப் போலவே, வாழ்க்கையில் உற்சாகத்தையும், ஆழத்தை யும் ஒரே நேரத்தில் தந்துவிடுகிறது.

முன்னர் இதே நிகழ்ச்சி சன்னிவேல் கோமள விலாஸில் ஜனவரி 19, 2008 அன்று சிறப்பாக நடந்தேறியது.

இந்தப் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. பிரசன்னா டிரஸ்டிற்கு நன் கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

தொடர்புகொள்ள:
அபர்ணா: 408.223.7578
சிவா: 408.329.0125
toshakila@gmail.com
aparna_sraju@yahoo.com

N. ஷகிலா பானு

© TamilOnline.com