Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் 'தமிழர் நாள்'
க்ரியா வழங்கும் இரண்டு நாடகங்கள்
- |நவம்பர் 2005|
Share:
Click Here Enlargeநவம்பர் 19, 2005 அன்று க்ரியாவின் பிரபல 'சுருதிபேதம்' நாடகம் மதியம் 2:00 மணிக்கும், தமிழ்நாட்டின் டி.வி.நியூஸ் வரதராஜன் குழுவினரின் முழுநீள நகைச்சுவை நாடகமான 'கலக்கற சந்துரு' மாலை 5:00 மணிக்கும் CET அரங்கில் நிகழ்த்தப்பட இருக்கின்றன. இவற்றை க்ரியா க்ரியேஷன்ஸ் வழங்குகின்றது.

டிவி நியூஸ் வரதராஜன் சென்னையில் 'கலக்கற சந்துரு பிரமாதம்' நாடகத்தைப் பலமுறை வெற்றிகரமாக மேடை யேற்றியுள்ளார். அவரை முதன்முதலாக அமெரிக்க ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்துகிறது வளைகுடாப் பகுதி தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான க்ரியா நாடகக் குழு.

சென்னைத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளாராக அறிமுகம் ஆன வரதராஜன் ஒரு சிறந்த நாடக நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, ப்ரேமி, ஜன்னல், சஹானா, தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் மனைவி, மற்றும் இது ஒரு காதல் கதை போன்ற தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர். வரதராஜன் யுனைடட் விஷ¤வல்ஸ் என்ற ஒரு நாடகக் குழுவை கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இங்கு மேடையேற இருக்கும் 'கலக்கற சந்துரு பிரமாதம்' நாடகத்தை எழுதியவர் பிரபல நாடகாசிரியர் வெங்கட். இந்த நகைச்சுவை நாடகம் அனைத்துத் தரப்பு மக்களாலும் பெரிதும் ரசிக்கப்படும் என்று வரதராஜன் நம்பிக்கை தெரிவிக்கிறார். அமெரிக்க ரசிகர்களைக் கருத்தில் கொண்டு பிரத்தியேக கவனத்துடனும், வெடிச் சிரிப்புக் காட்சிகளுடனும் இந்த நாடகம் உருவாகி வருகிறது.

க்ரியா நாடகக்குழு இதுவரை வழங்கிய தனிமை, மாயா, சுருதிபேதம் போன்ற நாடகங்கள் வளைகுடாப் பகுதி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றவை. ஆனந்த் ராகவ் எழுதி, தீபா ராமானுஜத்தின் இயக்கத்தில் அரங்கேறிய 'சுருதிபேதம்' இசைநாடகம் மீண்டும் மேடையேறுகிறது. 'சுருதி பேதம்' நாடகத்திலும் டி.வி. வரதராஜன் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடகங்களுக்கு முன் பதிவு செய்ய:
கோமள விலாஸ் - 408.733.7400
ஜெயஸ்ரீ - 510.366.6630
ராமானுஜம் - 408.655.2393

Online ticketing at
www.sulekha.com/bayarea
மேலும் விவரங்களுக்கு www.kreacreations.com
More

மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
சான் ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் 'தமிழர் நாள்'
Share: 




© Copyright 2020 Tamilonline