| மெலன் காக்டெயில் (Melon cocktail) குளிர்ந்த கா·பி
 ·ப்ரூட் நட் பால் (Dried fruit and nuts milk)
 தக்காளிச் சாறு
 லெமனேட் (Lemonade)
 ஆரஞ்சு ஜிஞ்ஜர் ஏல் (Ginger Ale) ஜூஸ்
 ஃப்ரூட் காக்டெய்ல்
 சாக்கலேட் மில்க்ஷேக்
 பெரி பழ சோயா ஸ்மூத்தி (Berry Soy Smoothie)
 சோய் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  இந்தக்  கோடைகாலத்தில் குடிப்பதற்கும் உடலுக்கும் இதமான சில குளிர்பான வகைகளை இந்த மாதம் செய்து மகிழ்வோம். 
 மாம்பழ மில்க் ஷேக்
 
 தேவையான பொருட்கள்
 
 மாம்பழம் (தோல் நீக்கி நறுக்கியது)	-	1 கிண்ணம்
 பால்	-	1 கிண்ணம்
 சர்க்கரை	-	1/4 கிண்ணம்
 
 செய்முறை
 
 மாம்பழத் துண்டங்களை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அல்லது பிளெண்டர் களில் (Blender) போட்டுக் கூழாக ஆகும் வரை நன்கு அரைக்கவும். பின்னர் பாலும் பனிக்கட்டிகளும் சேர்த்து இன்னும் ஒரு நிமிடம் ஓட்டவும்.
 
 உயரமான கண்ணாடி டம்ளர்களில் விட்டு அருந்தவும். இதனைப் பருகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
 
 மிக கெட்டியாக இருந்தால் அருந்தும் போது மேலும் சில பனி கட்டிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
 
 கொழுப்பு நீக்கிய பால் சேர்த்து செய்தாலே நன்றாக இருக்கும். குறைந்த கொழுப்பு , முழுக் கொழுப்பு அல்லது பாலேடு (cream), பாதி பால் பாதி பாலேடு (half and half) சேர்த்து செய்தால் சுவை கூடும்!
 | 
											
												|  | 
											
											
												| பின்குறிப்பு 
 பதப்படுத்திய (canned) மாம்பழக் கூழையும் உபயோகப்படுத்தலாம்.
 
 சில புதினா இலைகளை மில்க் ஷேக் உள்ள கண்ணாடி டம்ளரின் விளிம்புகளில் அருந்துமுன் வைத்து (garnish) அலங்கரிக்கலாம்.
 
 இந்த மில்க் ஷேக்கில் ஏலப்பொடி சேர்த்தும் பலர் பருகுவர்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மெலன் காக்டெயில் (Melon cocktail)
 குளிர்ந்த கா·பி
 ·ப்ரூட் நட் பால் (Dried fruit and nuts milk)
 தக்காளிச் சாறு
 லெமனேட் (Lemonade)
 ஆரஞ்சு ஜிஞ்ஜர் ஏல் (Ginger Ale) ஜூஸ்
 ஃப்ரூட் காக்டெய்ல்
 சாக்கலேட் மில்க்ஷேக்
 பெரி பழ சோயா ஸ்மூத்தி (Berry Soy Smoothie)
 சோய் ஷேக்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |