| தேங்காய் அல்வா தேங்காய் திரட்டுப் பால்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| உளுந்து சாதம் 
 தேவையான பொருட்கள்
 சாதம் வடித்தது - 2 கிண்ணம்
 உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
 தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
 எள்ளு - 1 தேக்கரண்டி
 முந்திரி - 10
 மிளகு - 1 தேக்கரண்டி
 மிளகாய் வற்றல் - 5
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கடுகு - 1 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 நெய் - 1 தேக்கரண்டி
 எண்ணெய் - சிறிதளவு
 
 செய்முறை
 வாணலியி்ல் எண்ணெய் விட்டு, மிளகாய், மிளகு, முந்திரி, தேங்காய்த் துருவல் இவற்றை வறுத்து கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம் பருப்பு, எள்ளு இவற்றைச் சிவக்க வறுக்கவும். எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாகப் பொடிசெய்யவும். வடித்து வைத்துள்ள சாதத்தின்மேல் பொடியைப் போட்டுக் கடுகு தாளித்து, முந்திரி வறுத்துப் போட்டு, நெய்யை விட்டு, உப்புப் போட்டுக் கலந்து பரிமாறவும். இது மிகவும் சுவையான ஒரு சாதம். சத்துள்ளதும் கூட.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தேங்காய் அல்வா
 தேங்காய் திரட்டுப் பால்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |