| இலை வடை 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| பலாப்பழ போளி 
 தேவையான பொருட்கள்
 பலாச்சுளை - 15
 தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
 வெல்லம் (பொடித்தது) - 2 கிண்ணம்
 ஏலக்காய் - 5
 நெய் - 1/2 தேக்கரண்டி
 மைதா மாவு - 2 1/2 கிண்ணம்
 நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 சீனி - 1 மேசைக்கரண்டி
 
 செய்முறை
 பழத்தைக் கொட்டை நீக்கிச் சிறிதாக நறுக்கி வேக வைக்கவும். மத்தால் நன்றாக மசித்துச் சிறிது வெல்லம் சேர்த்து ஏலப்பொடி, நெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். உருட்டும் பருவம் வந்ததும் இறக்கி ஆறியபின் உருட்டவும். 1 1/2 கிண்ணம் மாவுடன் 1/2 கிண்ணம் தண்ணீர், சீனி, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போலப் பிசைந்து 2 மணி நேரம் முன்பே ஊறவைக்கவும். பூரணத்தை மாவில் வைத்து கொழுக்கட்டை போலச் சப்பாத்திக் கல்லில் மெதுவாக இடவும். தோசைக்கல்லில் போட்டு வேக வைக்கவும். சிறிது நெய் ஊற்றினால் போதும். ஆனால் அடுப்பை மெதுவாக எரியவிட வேண்டும். ருசியான, வித்யாசமான போளி தயார்.
 
 பின்குறிப்பு: சீசன் சமயங்களில் (ஏப்ரல், மே, ஜூன்) பலாப்பழத்தை வேகவிட்டு வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறி வைக்கவும். 2 மாதம் வரைக்கும் கெட்டுப் போகாது. தேங்காய் மாத்திரம் அவ்வப்போது கலந்து கொள்ளலாம்.
 | 
											
												|  | 
											
											
												| அலமேலு ராமகிருஷ்ணன், கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இலை வடை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |