| ஆப்பிள் அல்வா வதக்கிய காய்கறி சாதம் (Stir-fried Vegetable Rice)
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் - 1 பூ
 இஞ்சி - 1 பெரிய துண்டு
 பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
 பட்டை - 2
 கிராம்பு - 4
 தேங்காய் - 1/2 மூடி
 பூண்டு - 3
 பாஸ்மதி அரிசி - 2 கிண்ணம்
 பெரிய வெங்காயம் - 2
 உப்பு - சிறிதளவு
 எண்ணெய் - தாளிக்க
 
 செய்முறை
 காலிஃப்ளவர் பூவைப் பிய்த்தெடுத்து வென்னீரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி மூடி வைக்கவும். சிறிது நேரத்துக்குப்பின் எடுத்து வைக்கவும். எல்லா மசாலா சாமான்களையும் தண்ணீர் விட்டு அரைத்து, அரைத்த விழுதை தனியாகத் எடுத்து வைக்கவும்.
 
 பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, களைந்து வடிகட்டி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பின் நன்றாக வதக்கவும். அதில் அரிசியைப் போட்டு அரைத்து வைத்த விழுதையும் கலந்து 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, மூடி, குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். மணமான ருசியான சத்தான சாதம் ரெடி.  உருளைக்கிழங்குக் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| லலிதா பாஸ்கரன், மேற்கு வர்ஜீனியா | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆப்பிள் அல்வா
 வதக்கிய காய்கறி சாதம் (Stir-fried Vegetable Rice)
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |