|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஆகஸ்டு 2001 : குறுக்கெழுத்துப்புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() ஆகஸ்டு 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். 
 ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கு வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு. (அது சரி, 'அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)
 
 குறுக்காக
 
 3. தினம் உள்ளே ஒளி குன்ற பெயர்கள் (5)
 6. பார்த்த கடைசி தினம் உயிருக்கு ஆபத்து (4)
 7. தேனூறாத, முத்தம் தராத இக்கால இதழ் (4)
 8. சாவி இல்லாத கிறித்தவர்க்குப் போதிக்கப்படுவது? (6)
 13. அவமானத்தால் வளைந்து மந்தரைக்கு அரைக் கிறுக்கு (6)
 14. குஜராத் நகரில் இடைவிட்டு உண்ணப்படுவது (4)
 15. அகத்தினழகைக் காட்டும் அபூர்வ முடிவாகிய செல்வம் (4)
 16. பூண்டு அவரை இறுதியில் நூல் சிறப்பை விவரிக்கும் (5)
 
 நெடுக்காக
 
 1. விருப்பமான விஷயங்கள் முதல் உள்ளமுருக வை (5)
 2. இயங்கும் மாடம் ஊன்று, குழப்பத்தில் தான் (5)
 4. பெண்முகத்தைப் பொலிவூட்டும் வண்ணம் மண்ணுள் விளையும் (4)
 5. நோயாளி குடிப்பது மோராக இடையே தாளம் போடலாம் (4)
 9. பழத்தில் நடுவே பழம் விளையுமிடம்! (3)
 10. பாரதமாதா (5)
 11. ஆனந்தமடைய ஓரங்களில் பூசலாம் நறுமணந்தரும் (5)
 12. ஏறி அமர்ந்து கொள் டக் டக் டக் டக் செல்லவா? (4)
 13. தடை செய்யப்பட்டது ஒன்று சேரா வந்தது பாதி (4)
 | 
											
												|  | 
											
											
												| வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com
 
 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
 
 குறுக்காக : 3. நாமங்கள் 6. கண்டம்  7. சஞ்சிகை  8. தட்டுங்கள்  13. கூனிக்குறுகி  14. பரோட்டா  15. வதனம்  16. அணிந்துரை
 நெடுக்காக : 1. உகந்தவை (உ-கந்த-வை) 2. நடமாடும் 4. மஞ்சள்  5. கஞ்சிரா  9. கழனி  10. சகுந்தலை  11. மகிழம்பூ  12. ஆரோகணி  13. கூடாதது
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |