|  | 
											
											
												| 
                                                        
	                                                        | டிசம்பர் 2005: குறுக்கெழுத்துப்புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() டிசம்பர் 2005 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  குறுக்காக 
 3. குருபக்தி குறைய எதிர்ப்புறமாய்ச் சென்று குடி (3)
 5. அரை மன இசைப் பாட்டுக்கு வேண்டியது சூழ மொட்டைத் தலையில் காணலாம் (5)
 6. திருவல்லிக்கேணி எல்லைகளில் அடை (2)
 7. ஒற்றைச் சக்கரத் தேர் வானில் பவனி வரும் நேரம் (3)
 8. கலை நிகழ்ச்சி நடக்குமிடம் உடற்பகுதி நடு விரலை மறைக்கும் (5)
 11. மலையில் இருப்பவன் நதி அகத்தின் லட்சணம் தெரியுமிடம் (5)
 12. தாமிரத்தாலான கூறு (3)
 14. போதும், முழுமையில்லாமல் அரும்பு (2)
 16. அனுபவத்தால் நற்குணங்கொண்ட ராகம் முடிவில்லாக் கல்வியின் அடையாளம் (5)
 17. பாய்ந்தால் உறுதி ஒளிர்ந்தால் மின்னல் (3)
 
 நெடுக்காக
 
 1. உறவைக் கட்டிச் சேர்க்குமா? இல்லை, உயிரை வாங்கிவிடும் (6)
 2. பொன்னிலும் அரிதானது, வெள்ளிக்கு முந்தையது (3)
 3. பாதிப் பல் ரம்பம் சுழலும் விளையாட்டுப் பொருள் (5)
 4. இடையில்லாது கிராமத்தில் உட்கார்ந்து எம்பு (2)
 9. வெண்கலப் படம் காட்டுவது சுத்தமானதல்ல (5)
 10. சுனாமியை உருவாக்குவது மலர், கொடியேறுமிடம் (5)
 13. சுழி கொண்ட குதிரை தேவைக்கதிகமானது (3)
 15. பாதி தேங்காய் வைத்து அரைத்தது தப்பு (2)
 | 
											
												|  | 
											
											
												| வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com
 
 நீங்கள் புதிர் மன்னரா?
 
 குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும்.  விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@chennaionline.com. டிசம்பர் 15க்குப் பிறகு, விடைகளை http://thendral.chennaionline.com/puthir/ என்ற சுட்டியில் காணலாம்.
 
 திருத்தம்: சென்ற இதழ் (நவம்பர் 2005) புதிரில்  குறுக்காக: 13. கடவுளின் எதிரி ஆட்டினான் தலையை வெட்டி (4) என்று இருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறோம்.
 
 நவம்பர் 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
 
 குறுக்காக5. உரு, 6. வருமானவரி, 7. பதைத்த, 8. சான்று, 9. துறவி, 11. கமுகு, 13. சைத்தான், 16. வலுவிழந்த, 17. கரி
 நெடுக்காக1. அருகதை, 2. சிவந்தது, 3. சமாதி, 4. காவலன், 10. விசைத்தறி, 12. முயலும், 14. தாக்கம், 15. கழனி
 
 புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது http://thendral.chennaionline.com/puthir-help.html என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |