|  | 
											
											
												| 
                                                        
	                                                        | நவம்பர் 2004 : குறுக்கெழுத்துப் புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() நவம்பர் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| குறுக்காக 
 1. நேரில் பார்த்து மிதித்த பாதி சந்துக்குள் நுழை (5)
 7. வெள்ளையரை எதிர்க்க, புளிப்பைப் போக்க ஒரு பயணம் (3, 4)
 8. தேங்காயிலிருந்து பூவைப் பெற முயன்று இரும்பின் அழுக்கோடு விடுதலை (3)
 9. எண்ண குழந்தை பிறக்கும் முன் தந்தை தலை வாங்கியது (3)
 11. நெஞ்சம் வந்து கொஞ்சம் கொஞ்சும் பாடல் (4, 3)
 13. சாவி இல்லாத போது இப்படி உள்ளே போகலாம் (3, 4)
 14. ஒரு சொல், இரட்டையர்களுக்கே அதிகம் புழங்கும் (3)
 16. படித்து (நீ)க்கு (3)
 17. பரிச்சயமில்லா தலைவால் தெரியாநிலை (2, 2, 3)
 19. இது பாடமாக வந்தால் மாணவர் எல்லாவற்றையும் இழந்து விடுவாரோ? (5)
 
 நெடுக்காக
 
 1. உரக்க கத்த எசமான் என்னை விட்டு மயங்கினார் (5)
 2. களவு செய்து செல்வம் இறுதியாக வட்டி சேர்க்கும் (3)
 3. பளிச்சென்ற உடையானாலும் இதை தீபாவளிக்கு அணிவதில்லை (4, 3)
 4. அந்த ஆளைச் சமைக்க ஒரு காய் (3)
 5. புகைத்துப் பாக்கிடுபவர் மறைத்த ஆயுதம் (7)
 6. குணமாகும்படிச் சிரிக்கும் முறை சாப்பிடமுடியாமற் செய்துவிடுமோ? (2, 3)
 10. காரவகைகள் பெற முட்டைக்கு சுழியின்றி உதறு (3, 4)
 12. வளர்ப்புக் குழந்தைமேல் பைத்தியமாய் இப்படி உளறுவர் (7)
 13. மலர் கொடு கை பயங்கரப் பெரியது (5)
 15. மனைவி இடையொடியச் சேர்த்த அரேபியப் பணம் மொட்டாகவே இருக்கும் நிலை (5)
 17. முன்பு சுரமில்லாக் கற்பனையில் கவிஞருக்கு இந்திரன் தோட்டத்தில் விளைந்தது (3)
 18. தாழ்வு நீருக்கு, மகிழ்ச்சி உல்லாசப் பயணிகளுக்கு (3)
 | 
											
												|  | 
											
											
												| வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com
 
 அக்டோபர் 2004 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
 
 குறுக்காக:4. தீங்கு  5. (வீர) பாண்டியன்  7. வீர  8. தங்க ரதம்  10. மின் முகவரி  11. காசி  12. மாமல்லன்  14. பாகம்
 நெடுக்காக:1. அங்காரகன்  2. ஷண்முகப்ரியா  3. சுய (பாகம்)  6. பாதக்கமலம்  9. தற்காலிகம்  13. மடை
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |