|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஜனவரி 2003 : குறுக்கெழுத்து புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() ஜனவரி 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். 
 ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)
 
 குறுக்காக
 
 2. இந்த தந்திரமெல்லாம் உண்மையில் நடந்ததில்லை (3)
 5. பார்ப்பது பொழுதுபோக்கு (4)
 6. வலிக்கும் பல்லிடுக்கில் கூட்டம் (4)
 7. கப்பல் உள்ளே வர ரகளை (5)
 9. வழிபடப் பாடு, இத்தகைய கையுடையவனையா? (2)
 10. அப்பு உண்மையை மறைத்துப்பேசு (2)
 12. கொள்ளை கொண்டு வந்து கொடுக்க ஒழிந்த தரகர் (5)
 14. இலங்கை நகரில் அரை அணா உருவங் காட்டும் (4)
 15. மூன்றெழுத்திலா வித்திலிருந்து வளர்ச்சி (4)
 16. எண்ணிய முடிவில் முயல் ஆறு (3)
 | 
											
												|  | 
											
											
												| நெடுக்காக 
 1. இறுதியாக வாடி பாதிப் புகழுரை சூழும் (4)
 2. தோழமையில்லாதவரிடம் பாராட்டப் பெறும் (2)
 3. சரியான நேரத்தைத் தெரிந்து கொள்! (4, 2)
 4. வலிச் சத்தம் ஈரைந்து கேடு (4)
 8. சுத்தம் செய்த வணிகர் தலைவரைக் கட்டியடி (6)
 11. பிறருழைப்பை அநியாயமாக அழுத்தித் தேய்த்துப் பயன்படுத்து (4)
 13. தொடர்ந்து செல், இறுதியில் இழுத்து நிறுத்தி வைப்பதற்கா? (4)
 15. வில்லினை விளிம்புகளால் பெறும் எதிர்பாராத விளையாட்டின் முடிவு (2)
 
 வாஞ்சிநாதன்
 vanchinathan@vsnl.net
 
 விடைகள்
 குறுக்காக2.	பஞ்ச 5. வேடிக்கை 6. கும்பல் 7. கலவரம் 9. துதி 10. பூசு 12. கவர்ந்து 14. கண்ணாடி 15. விருத்தி 16. யமுனை
 நெடுக்காக1.	முடிவாக  2. பகை 3. சகுனம் பார் 4. ஆபத்து 8. வடிகட்டிய 11. சுரண்டு 13. துரத்து 15. வினை
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |