|  | 
											
											
												| 
                                                        
	                                                        | செப்டம்பர் 2001 : குறுக்கெழுத்துப்புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() செப்டம்பர் 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். 
 ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கு வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு. (அது சரி, 'அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்!)
 
 குறுக்காக
 
 1. பூ வாசம் பங்கிட்டுக் கொண்டது (5)
 4. மஞ்சத்திலிரு சம்யுக்தா இறுதியில் மறைப்பு கொண்டு வருவாள் (3)
 6. கற்பிப்பவர் தின்னத் தொடங்க நரம்பிலோடும் (3)
 7. அடியில்லாமல் தாங்கள் நுழைய ஒன்றே கூடல் (5)
 8. கந்தா பானையுடன் செய்யுள் சேர் (4)
 9. செல்வத்துடன் பிச்சைக்ககாரன் கையில்..... (4)
 12. வீடு பெற தலையணைக்குப் போர்வையுடன் நஞ்சு (5)
 14. பிறக்கும் முன் குழந்தை குடும்பத்தலைவனுடன் எரிந்துபோ (3)
 16. மூட்டையாய்க் கட்டப்படும் பொய் (3)
 17. சிறப்பாக உறுதி குலைந்து பற தாறுமாறாக (5)
 
 நெடுக்காக
 
 1. பொன்னிலை சஞ்சரிக்கத் தொடங்கித் தடுமாறிய கோள் (3)
 2. இறையன்பு தலையில்லாக் காயத்துடன் உணவுக்கட்டுப்பா (5)
 3. வறுமையைக் காட்டும் ஆடையில் பை பாதி அஞ்சல் (4)
 4. குடிக்க முகத்தழகைக் குலைப்பது கண்ணில் தொடங்கும் (3)
 5. சாப்பாட்டுக்குத் திண்டாடிக் கொண்டே உடன்வாசி (5)
 8. உணவுக்குச் சுவையூட்டும்படி குண்டாகு (2, 3)
 10. சுவை ரசி, கரும் பேதத்தால் (5)
 11. பாசம் வேறுவிதமாக திருடர்த்தலைவனுடன் வருவாய் கொணர் (4)
 13. தள்ளிப்போ இடை மூலம் மேற்புறமாகக் குவி (3)
 15. இதைச் செய்யச் செய்ய தைரியமற்றவர்கள் குனிவர் (3)
 | 
											
												|  | 
											
											
												| வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com
 
 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
 
 குறுக்காக : 1. சம்பங்கி 4. படுதா  6. குருதி  7. சங்கமம் 8. கடம்பா 9. திருவோடு  12. உறைவிடம்  14. கருகு  16. புளுகு  17. திறம்பட
 நெடுக்காக : 1. சருகு  2. பத்தியம் 3. கிழிசல் 4. பருக  5. தாளம்போடு  8. கல் உப்பு  10. ருசிகரம்  11. சம்பாதி  13. விலகு  15. குட்ட
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |