|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  மதிற்சுவர்கள் சாதிகளுக்கு மத்தியில்
 தேவாலயங்களில் மட்டுமல்ல
 கல்லறைகளிலும்
 
 தோமையார் கூட
 தீண்டத்தகாதவராகிறார்
 அரிசனத்தெருவில் அவருக்குக்
 கோவில் இருப்பதால்.
 
 அருட்சகோதர சகோதரிகளுக்கும்
 தேவைப்படுகின்றன வண்ண உடைகள்
 சாதீய வர்ணங்கள் பூசி
 
 தேர்கள் வர மறுக்கின்றன
 திருவிழாக்கள் புறம் தள்ளுகின்றன
 கீழ்ச்சாதிக்கு ஏனிந்த
 ஆடம்பரங்கள்?
 
 மதம் மாறுவோம் - மனம்
 மட்டும் மாறவே மாட்டோம்
 
 ஆனாலும் உரக்கச்சொல்லுவோம்
 நாங்கள் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்
 | 
											
												|  | 
											
											
												| பெப்பின் பிரிட்டோ | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |