|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| மனம் வெதும்ப மதம் வளர்த்து
 என்ன பயன்?
 
 இனம் அழிந்து
 மதம் வாழ்ந்து
 என்ன பயன்?
 
 பகை வளர்த்து
 பழி தீர்க்க
 மதம் கருவி!
 பதவி காக்க
 அரசியல் செய்ய
 மதம் துருப்புச் சீட்டு!
 புரியாதவன் பகடைக்காய்!
 
 மதம் போற்றாமல்
 இறை போற்றுங்கள்!
 வேறுபாடு பகுத்தறிவாய்..
 
 மதம் முன்னிலை வகித்து
 மனிதம் அழிந்தால்
 அது தீவிரவாதம்
 யார் செய்தால் என்ன...
 எங்கு நடந்தால் என்ன
 மனிதம் மலரட்டும்!
 | 
											
												|  | 
											
											
												| தமிழ்ப்பிரியன், ஆல்புகர்க்கி, நியூ மெக்சிகோ
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |