ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: 'த்விதி த்யுதி' நடன நிகழ்ச்சி பிரித்தானிய பாராளுமன்றத்தில் பெருமைப்படுத்தப்பட்ட அட்லாண்டா கவிஞர் கிரேஸ் பிரதிபா
|
 |
FeTNAவில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பங்களிப்பு |
   |
- சுந்தரமூர்த்தி | ஆகஸ்டு 2025 |![]() |
|
|
|
 |
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38ஆவது விழா 2025
ஜூலை 3 முதல் 5ஆம் தேதிவரை வடகரோலினா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து ராலே நகரில் நடைபெற்றது. விழாவில் சுமார் 30க்கும் அதிகமானோருடன் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பங்கேற்றது.
மரபுக்கலைகளும் செவ்வியலே என்ற தலைப்பில் நாடகம் ஒன்றை மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மேடையேற்றியது. இந்த நாடகம், முதன்முறையாகத் தமிழர் ஆடற்கலைகளை ஒப்பீடு செய்தது. இதில் பழந்தமிழர்க் கலைகளில் ஒன்றான சதிராட்டத்தில் இருந்து தோன்றியது பரதம் என்று சொல்லப்பட்டிருந்தது. பரத நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் அடைவுகளுடன், பறை அடைவுகள் எப்படி ஒன்றாக இருக்கிறது என்பதை விளக்கிக் காட்டியது. ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்ட அடைவுகள் எப்படிப் பறை மற்றும் பரத அடைவுகளுடன் ஒன்றாக இருக்கிறது என்பதை ஆடிக்காட்டினர். பழந்தமிழர் கலைகள் அனைத்தும் சமமானவையே, அனைத்தும் போற்றத் தக்கவையே என்ற மையக்கருவுடன் நாடகம் நிறைவு பெற்றது. ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று, நீண்ட நேரம் கைதட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நாடகத்தில் ஒப்படைவுகள் ஆடிக் காட்டியவர்கள், மினசோட்டாவிற்கு வந்திருந்த ஆசான்களான திரு இராசா, திரு பாவேந்தன் ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தவர்களே. இந்த நாடகத்தில் பயன்படுத்தப்பட்டவை: பறையிசை பத்மஸ்ரீ விருது பெற்ற திரு வேலு ஆசான், தவில் தஞ்சாவூர் திரு நாகராஜ் கருப்பையா, நாயனம் திரு இரவிச்சந்திரன், மகுடப்பறை திரு சங்கர்கணேஷ். |
|
சுந்தரமூர்த்தி, இயக்குனர், மினசோட்டா தமிழ்ச் சங்கம் |
|
 |
More
ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: 'த்விதி த்யுதி' நடன நிகழ்ச்சி பிரித்தானிய பாராளுமன்றத்தில் பெருமைப்படுத்தப்பட்ட அட்லாண்டா கவிஞர் கிரேஸ் பிரதிபா
|
 |
|
|
|
|
|