|  | 
											
											
												| 
                                                        
	                                                        | GTEN: சென்னையை சிலிக்கான் விரிகுடாவாக விளம்பரப்படுத்த மாநாடு |    |  
	                                                        | - நர்சி கஸ்தூரி ![]() | ![]() ஜனவரி 2019 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இயங்கும் உலகத் தமிழ் தொழில்முனைவோர் இணையம் (Global Tamil Entrepreneurs Network - GTEN), சென்னையை சிலிக்கான் விரிகுடாவாக விளம்பரப்படுத்தத் தீர்மானித்துள்ளது. ஜனவரி 25, 2019 அன்று இதற்காக உலகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு ஒன்றை GTENChennai2019 என்ற பெயரில் நடத்தவுள்ளது. இது ஜனவரி 23-24 தேதிகளில் தமிழக அரசு நடத்தும் உலக முதலீட்டாளர் சந்திப்பை (www.tngim.com) அடுத்து நடத்தப்படும் என்கிறார் இந்தக் கருத்தை முன்னெடுத்துள்ள திரு நரசிம்மன் கஸ்தூரிரங்கன். 
 இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஆசியாவின் சிலிக்கான் வேலியாகச் சென்னையை அறிமுகப்படுத்தும் விளம்பரப் பலகைகள் அமெரிக்காவின் முக்கியப் பெருவழிச்சாலையான 101ன் ஓரங்களில் வைக்கப்படும். உலகத் தமிழ் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்துறையினர், தலைவர்கள், புத்தாக்கம் செய்வோர் அனைவரையும் GTENசென்னை மாநாடு ஓரே கூரையின் கீழ் கொண்டுவரும். மின்னூர்திகள் போன்ற புதிய துறைகளில் இதில் கவனம் குவிக்கப்படும். “இந்த முயற்சிகளில் BITS, IIT மெட்ராஸ், NIT மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளின் முன்னாள் மாணவர் சங்கங்கள் ஈடுபடுத்தப்படும்” என்கிறார் GTEN அமைப்பின் இணைநிறுவனர்களில் ஒருவரான பட்டு கோவிந்தராஜ்.
 
 மாநாட்டில் பங்கேற்க இங்கே பதியவும்: www.gtenchennai.com
 மேலே விவரங்களுக்கும் ஸ்பான்சர் செய்யவும் மின்னஞ்சல் அனுப்புக: Narasimhan (Narsi) Kasturi at gtenchennai@gmail.com
 | 
											
												|  | 
											
											
												| நரசி கஸ்தூரி, கூப்பர்டினோ, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |