| தமிழ் பண்பாட்டு மையம்: நிதி திரட்ட எஸ்.பி.பி. மெல்லிசை விரிகுடா குறள்கூடம்: திருக்குறள் போட்டி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| 2019 மார்ச் 9, 10 தேதிகளில்,ஞானானந்த சேவா சமாஜம், கலிஃபோர்னியா, ராதாகல்யாணம் மற்றும் லலிதா திரிசதி, சுவாசினி பூஜை ஆகியவற்றைக் காஞ்சி மகாபெரியவரின் 125வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டும், சமாஜத்தின் கலிஃபோர்னியா அமைப்பின் 6ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் ஏற்பாடு செய்துள்ளது. 
 இது சமாஜம் அமெரிக்காவில் தொடங்கிய பத்தாம் ஆண்டு நிறைவும் ஆகும்.
 
 இந்த வைபவம் லிவர்மோர் சிவா விஷ்ணு கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. மார்ச் 9, சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், 8:15க்கு சுவாமி ஞானானந்தர் பாதுகை, காஞ்சி மஹாபெரியவர் பாதுகைகளுக்கு அபிஷேகம், பூஜை ஆகியவை நடக்கும். தொடர்ந்து கிரம்பூர் குருநாதன் பாகவதர் குழுவினரின் சம்பிரதாய பஜனையும், மாலை 4:00 மணிக்கு திவ்யநாம பஜனையும் நடைபெறும்.
 
 மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு ஸ்ரீவித்யா ஹோமமும், தொடர்ந்து சுவாசினி பூஜையும் நடைபெறும். மதியம் 1:00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை ராதாகல்யாண மகோத்சவம் நடைபெறும்.
 
 சுவாசினி பூஜையில் பங்கேற்க இங்கே பதியவும்: www.gssus.org
 
 மேலே விவரங்களுக்கும் பொருளுதவி செய்யவும் மின்னஞ்சல் அனுப்ப: californiaradhakalyanam@gmail.com
 | 
											
												|  | 
											
											
												| செய்திக்குறிப்பிலிருந்து | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தமிழ் பண்பாட்டு மையம்: நிதி திரட்ட எஸ்.பி.பி. மெல்லிசை
 விரிகுடா குறள்கூடம்: திருக்குறள் போட்டி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |