| தொக்கு! நல்லா மொக்கு! ஆரஞ்சுத் தோல் தொக்கு
 பேரீச்சம்பழத் தொக்கு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| தேவையான பொருட்கள் தோல் உரித்த பூண்டு - 1 கிண்ணம்
 பச்சை மிளகாய் (காரம் குறைவானது) - 1 கிண்ணம்
 தோல் சீவி நறுக்கிய இஞ்சி - 1/2 கிண்ணம்
 ஊற வைத்த புளி - 2 மேசைக்கரண்டி
 நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம்
 வெல்லம் - 2 மேசைக்கரண்டி
 
 வறுத்துப் பொடிக்க
 கொத்துமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
 வெள்ளை எள் - 1 மேசைக்கரண்டி
 
 தாளிக்க
 கடுகு - சிறிதளவு
 பெருங்காயப் பொடி - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 மஞ்சள் பொடி - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், ஊறவைத்த புளி இவற்றை உப்புச் சேர்த்து நன்கு அரைக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயப் பொடி தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். வெல்லம் நசுக்கிப் போட்டு மேலும் வதக்கிக் கடைசியில் வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள கொத்துமல்லி விதை, எள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இதற்குச் சரியான ஜோடி சப்பாத்திதான், இரண்டுமாகக் கைகோர்த்துக் கொண்டு இறங்கும்.
 | 
											
												|  | 
											
											
												| ஜயலக்ஷ்மி கணேசன், ட்ராய், மிச்சிகன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தொக்கு! நல்லா மொக்கு!
 ஆரஞ்சுத் தோல் தொக்கு
 பேரீச்சம்பழத் தொக்கு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |