| கடாய் பேபி கார்ன் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| பச்சைப் பசேல் சப்ஜி 
 தேவையான பொருட்கள்
 கீரை - 2 கட்டு
 எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
 வெண்ணெய் - 1 தேக்கரண்டி
 பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் - 2
 இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
 சிவப்பு மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 வெங்காயம் - 1
 தக்காளி - 1
 தனியா பொடி - 1/2 தேக்கரண்டி
 சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
 பாவ்பாஜி மசாலா - 1/2 தேக்கரண்டி
 கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
 பால் - 1/4 கிண்ணம்
 முந்திரி பொடி - 2 மேசைக் கரண்டி
 காய்கறிகள் - 1 1/2 கிண்ணம்
 கொத்தமல்லி - சிறிதளவு
 
 செய்முறை
 வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் சீரகம் போட்டு வெடித்ததும் இஞ்சி, பூண்டு, விழுதுகள், மிளகாய், சிகப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் பொடி, எல்லாம் போட்டு உப்பும், சர்க்கரையும் போடவும். எடுத்து வைத்துக் கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறிகள், மசாலாப் பொடிகள், தனியா, சீரகப் பொடிகளையும் போட்டு நன்கு வதக்கவும். ஸ்பினாச் கீரையை வேகவிட்டு நன்கு மசித்து அதையும் போட்டுத் தண்ணீர் விட்டு எல்லாவற்றையும் போட்டு ஒரு கொதி விடவும். கெட்டியான பால், முந்திரிப் பொடியையும் போடவும். ஒன்று சேர்த்துக் கொதித்தவுடன் இறக்கி வைத்துக் கொத்துமல்லி நறுக்கிப் போடவும். சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கடாய் பேபி கார்ன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |