| மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் வருடாந்திரத் தமிழர் விழா இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதியை ஒட்டிய வார இறுதியில் தென்கரோலினா மாநிலத்திலுள்ள சார்ல்ஸ்டன் நகரில் நடைபெற உள்ளது. விழாவின் மையக் கருத்து 'தனித் தமிழே நனி சிறப்பு! இனம் பேணல் நம் பொறுப்பு' என்பதாகும். முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்களின் வழிகாட்டுதலில் பல்வேறு குழுக்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. 
 சிறப்பு நிகழ்ச்சிகள்: விளிம்புநிலைக் கலைஞர்களான 'கானா பழனி', திண்டுக்கல் சக்தி நாட்டியக் குழு ஆகியோர் தப்பாட்டம் மற்றும் பலவித தொன்மைக் கலைகள் வழங்க உள்ளார்கள். 'புதிய கோணங்கி' மூலம் மக்களுக்கு அறிமுகமான 'புதுகை பூபாளம்' குழுவினர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள்.
 
 தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், நாசர், கோடைமழை வித்யா ஆகியோர் வருகிறார்கள். கவிஞர் நா. முத்துகுமார் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் ஆவதூஉம்' என்ற தலைப்பிலான கவியரங்கத்துக்குத் தலைமை ஏற்று நடத்த வருகிறார். கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் 'தமிழைச் சிதையாமல் காப்பது ஊடகங்களா? பொது மக்களா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் விழா அமைப்பாளர்களுடன் தொடர்புகொள்ளவும்.
 
 கலைமாமணி திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் தமிழிசை வழங்கவுள்ளார். தவிர, பல்வேறு தமிழ்ச் சங்கங்களிலிருந்து நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான வினாடி வினா, பெரியோர்களுக்கான இலக்கிய வினாடி வினா, United States Tamil Political Advisory Council (USTPAC) நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி, அமெரிக்கத் தமிழறிஞர் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் தரும் 'சங்க காலத்தில் சாதிப் பிரிவினைகள் இல்லை' என்ற ஆய்வறிக்கை, முனைவர் ஜோப் தாமஸ், எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆகியோரது நிகழ்ச்சிகளும் இடம்பெறும். நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் உருத்திர குமாரன் அவர்களும், அண்மையில் கனடிய நாடளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட இராதிகா சிற்சபேசன் அவர்களும் சிறப்புரையாற்றுவார்கள்.
 
 இணையரங்க நிகழ்ச்சிகள்: விழாவில் சென்னைப் பல்கலைகழகம், மதுரை காமராசர் பல்கலைகழகம், அண்ணாமலைப் பல்கலைகழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூட உள்ளனர். வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் துணைவேந்தர் பேரா. G. விசுவநாதன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மு. சேதுராமன் ஆகியோரும் வருகை தரவுள்ளார்கள்.
 | 
											
												|  | 
											
											
												| தொடர் மருத்துவக் கல்வியில் (Continuing Medical Education), வாழ்க்கைத் துணைநலச் சந்திப்பு, இணையப் பயிலரங்கம், வலைஞர் சந்திப்பு, அமெரிக்க தமிழ்க் கழகம் நடத்தும் கலந்தாய்வுக் கூட்டம் ஆகியவையும் நடைபெற உள்ளன. 
 அமெரிக்காவாழ் தமிழர்களுள் சிறப்பாகத் தொழில் தொடங்கி, வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு, அவர்களது வெற்றிகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்கள். புதிதாகத் தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு இது ஊக்கமாக அமையும். இதனோடு சேர்ந்து 'பெருவணிகக் கண்காட்சி'யும் (Trade Expo) நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க மற்றும் இந்தியத் தொழில் முனைவோருக்கிடையே தொடர்புகளை மேம்படுத்த வாய்ப்புக்கள் ஏற்படும். எனவே தொழிலதிபர்கள் இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வது பயனளிக்கும்.
 
 விழாவைப் பற்றிய விவரங்கள் காணவும் பதிவு செய்யவும்: fetna.org
 
 தொடர்புக்கு:
 பழனி சுந்தரம், பேரவைத் தலைவர் - 203.271.2064
 தண்டபாணி குப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர், பேரவைத் துணைத்தலைவர் - 843.814.7581
 
 மயிலாடுதுறை சிவா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |