| பள்ளிக்கூடத்துக்கு வந்தால் ஒரு ரூபாய் சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 லாரன்ஸின் மனிதநேயம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | எழுபத்தாறு வயதில் இமயமலை ஏறியவர் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஜூலை 2008 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  சாதனைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மின் பகதூர் ஷெர்ச்சன். 76 வயதாகும் இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். இமயமலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. அதற்காக அயராது உழைக்கத் தொடங்கியவர், தனது வயதைப் பொருட்படுத்தாமல் பல்வேறு கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டார். லட்சியமும் ஆர்வமும் கை கொடுக்க, அண்மையில் சிகரத்தில் ஏறி மகத்தான சாதனை படைத்திருக்கிறார் மின் பகதூர். இவரது முயற்சிக்கு ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இமயமலையில் ஏறும்போது தனக்கு எந்தவிதமான பயமோ, தயக்கமோ ஏற்படவில்லை என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இவரை அப்பகுதி மக்கள் மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். ஜப்பானைச் சேர்ந்த கட்சுசுகே என்ற 71 வயது முதியவரின் சாதனையை இவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பள்ளிக்கூடத்துக்கு வந்தால் ஒரு ரூபாய்
 சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 லாரன்ஸின் மனிதநேயம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |