| இயக்குனர் பிரபுதேவா வாத்தியார் அர்ஜுன்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜூலை 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  விக்னேஷ் கதாநாயகனாக நடிக்க 'ஆச்சார்யா' என்ற படத்தை இட்டா பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகியாக புதுமுகம் திவ்யா நடிக்கிறார். 
 இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய ரவி இயக்கும் முதல் படம் 'ஆச்சர்யா'. முற்றிலும் வித்தியாசமான கதையுடன் இப்படத்தை இயக்குகிறார் ரவி.
 
 பிராமண இளைஞன் ஒருவனை மையமாக கொண்டு சொல்லப்படும் கதை 'ஆச்சார்யா'. அவனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை கொண்டு அழகாக உருவாகி வருகிறது.
 
 நா. முத்துக்குமார் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். பாடல் காட்சிகளை பதிவு செய்யப்பட்ட பின்பே பாடல்கள் அனைத்தும் எழுதப்பட்டது என்பது படத்தைப் பற்றிய சிறப்பு செய்தியாகும்.
 
 விக்னேஷ், திவ்யா இவர்களுடன் வடிவுக்கரசி, நாசர், சரண்ராஜ் போன்றவர்களும் நடிக்கிறார்கள். படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை கவனிக்கிறார் ரவி.
 | 
											
												|  | 
											
											
												| ''இந்தப் படத்தில் கதாநாயகன், வில்லன், காமெடியன் என்றெல்லாம் யாரும் கிடையாது... ஒரு மனிதன் சிலருக்கு ஹீரோவாக தெரிவான்... சிலருக்கு வில்லனாக தெரிவான்...
 ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக அதுவும் நல்ல மாதிரியாக
 எப்பொழுதும் இருக்க முடியாது... அதைத் தான் இந்தப் படத்தின் ஒவ்வொரு பாத்திரமும்
 பிரதிபலிக்கும்...'' என்று கூறுகிறார் இயக்குநர் ரவி.
 
 கேடிஸ்ரீ
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இயக்குனர் பிரபுதேவா
 வாத்தியார் அர்ஜுன்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |