| வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே' வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஆகஸ்டு 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  பல வெற்றிப்படங்களை தயாரித்து வழங்கிய சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் தற்போது மிகவும் பிரம்மாண்டமான முறையில் 'அரண்' என்கிற படத்தை தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 
 சமீபத்தில் இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
 
 விழாவில் பேசும் போது கமல்ஹாசன் நம் இந்திய ராணுவத்தை பெரிதும் புகழ்ந்து தள்ளிவிட்டார். நமது ராணுவம் உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று. அதன் பெருமையைப் பற்றி படம் எடுத்திருப்பதன் மூலம் நம்மையும் அறியாமல் சேவை செய்திருக்கிறோம் என்று கூறிய கமல்ஹாசன். இதற்காக படதயாரிப்பாளர் செளத்ரியையும் பாராட்டினார்.
 
 'அரண்' படத்தில் மலையாள படவுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஜீவா மற்றொரு நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக கோபிகா, லட்சுமி கோபால்சாமி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு 'காதல்'பட புகழ் ஜோஷ்வாஸ்ரீதர் இசையமைத்திருக்கிறார்.
 | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வசந்த் இயக்கத்தில் 'சத்தம் போடாதே'
 வளர்ந்து வரும் 'காதலே என் காதலே'
 விஷால் நடிப்பில் 'தாமிரபரணி'
 திரைப்படமாகிறது ஜி.கே. மூப்பனார் வாழ்க்கை வரலாறு
 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'முனி'
 அடுத்த வாரிசு!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |