| 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்! வாத்தியார் அர்ஜுன்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இயக்குனர் பிரபுதேவா |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜூலை 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் படம் ஒன்றை இயக்க வருகிறார் பிரபுதேவா. தெலுங்கில் நடன இயக்குநராகவும், வெற்றிப் பட இயக்குநராகவும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் பிரபுதேவா 'போக்கிரி' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். நாயகனாக விஜய் நடிக்க அவருக்கு இணையாக அஸின் நடிக்கவிருக்கிறார். 
 வழக்கம் போல் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காதல், மோதல், சண்டை, உணர்ச்சிகரமான காட்சிகள், நகைச்சுவை என்று அனைத்து அம்சங்களும் 'போக்கிரி'யிலும் உண்டு.
 
 தமிழிலும், தெலுங்கிலும் அதிக வெற்றிப்படங்களை தயாரித்து அளித்த எஸ்.ரமேஷ்பாபு இப்படத்தை தயாரிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், வடிவேலு, நாசர், ஸ்ரீமன் போன்ற பிரபல நட்சத்திரங்களும் நடிக்க விருக்கின்றனர்.
 | 
											
												|  | 
											
											
												| மணிசர்மா இசையமைப்பில் உருவாகும் 'போக்கிரி'யின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை கவனிக்கிறார் பிரபுதேவா. 
 கேடிஸ்ரீ
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'ஆச்சார்யா'வாக விக்னேஷ்!
 வாத்தியார் அர்ஜுன்!
 மணிவண்ணன் மகன் நடிக்கும் 'ஆரம்பம்'
 மனதோடு மழைக்காலம்
 விக்ரமன் இயக்கத்தில் 'சென்னைக் காதல்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |