| 13வது குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல் அமெரிக்காவுக்கு நிறுத்தமற்ற நேரடி விமான சேவை
 மதுரை இடைத்தேர்தல்
 புகைக்க வேண்டுமா? பணிப்பெண்ணைக் கேளுங்கள்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  நெடுங்காலமாகவே மாட்டுப் பொங்கல் நாளில் தமிழக கிராமப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அப்படியல்லாமல் கிராமக் கோவில் திருவிழாக்களிலும் இப்போதெல்லாம் நடத்துகிறார்கள். பாய்ந்து ஓடும் காளையை அடக்கும் காளைக்குப் பரிசுப் பொருள்கள் தருவது வழக்கம். இது தமிழகத்தின் வீரவிளையாட்டாகக் கருதப்படுகிறது. ஆனால், ஜல்லிக்கட்டின் போது பங்குபெறுவோரும் பார்வையாளர்களும் ஏராளமாகக் காயமுறுவது சகஜம். மரணம் ஏற்படுவதும் அரிதல்ல. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. அந்த மாடுகளை வெறிகொண்டு ஓட வைப்பதற்காக அவற்றுக்கு சாராயம் கொடுப்பது, அவற்றின் குறிகளிலும் கண்களிலும் மிளகாய்ப்பொடி தடவுவது உண்டாம். கணக்கற்றவர்கள் அந்த மாட்டின் மீது பாய்ந்து இழுத்து அதைச் சித்ரவதை செய்து கீழே இழுத்துத் தள்ளுவதால் அவையும் செத்துப் போவதும் உண்டாம். இந்த உண்மைகளைச் சுட்டிக்காட்டி இந்திய விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த மனுவை ஏற்று உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டைத் தடைசெய்துள்ளது. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 13வது குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல்
 அமெரிக்காவுக்கு நிறுத்தமற்ற நேரடி விமான சேவை
 மதுரை இடைத்தேர்தல்
 புகைக்க வேண்டுமா? பணிப்பெண்ணைக் கேளுங்கள்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |