| 
											
											
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - துரை.மடன் | அக்டோபர் 2002 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகத்க்கு உத்தர விட்ட உச்சநீதிமன்றம் இது குறித்து காவிரி ஆணையம் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
  உடனே காவிரி ஆணையம் கூட்டப்பட வேண்டு மென்று கர்நாடக அரசு பிரதமரை நிர்ப்பந்தித்தது. செப்டம்பர் 8ம் தேதி ஆணையம் கூடியது. இதில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டார். தமிழகத்துக்கு தினசரி வினாடிக்கு 0.8 டிஎம்சி (9 ஆயிரம் கனஅடி) தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம்  உத்தரவிட்டது.
  இதையடுத்து கர்நாடகாவில் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட் டம் வலுப்பெற்று வருகிறது. பல்வேறு அணைகளைச் சுற்றி போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்துக்கு விடவேண்டிய தண்ணீர் விடமுடியாமல் இருக்கிறது.
  காவிரி ஆணைய முடிவை எதிர்த்து தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் ஆணைய உத்தரவுகளைக் கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளதா என்பதை புள்ளிவிபரங்களுடன் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
  இந்நிலையில் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் தண்ணீர் திறந்துவிடுவதாக கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகளின் எதிர்ப் பால் தண்ணீர் திறந்துவிட முடியாமல் அரசு உள்ளது. தண்ணீர் வருமா? வராதா? என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு எதிராக எதிர்ப்புணர்வு கர்நாடகாவில் வளர்ந்து வருவது நிதர்சனம்.
  ******
  அதிமுக தலைவி ஜெயலலிதா காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மீது கடும் விமரிசனங் களை வைக்கத் தொடங்கியுள்ளார். சோனியா வெளிநாட்டுக்காரர் என்ற ஆயுதத்தை மீண்டும் ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். ஒரு அந்நியர், இந்தியர் அல்லாத ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவது எப்படி? சோனியாவுக்கு தேசப்பற்று இல்லை? இவ்வாறு அவரது கண்டனங்கள் வளர்ந்தன.
  காங்கிரஸ் தொண்டர்களும் அதிமுக தொண்டர் களும் மாறி மாறி சோனியாவுக்கும் ஜெயலலிதா வுக்கும் கொடும்பாவியை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
  தேசிய அரசியலிலும் தனக்கான கவனயீர்ப்புக்கு களம் அமைத்துக் கொள்கிறார் ஜெயலலிதா. சோனியா மீதான கடும் விமரிசனங்கள் இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் புதிய விருப்பங் களை ஏற்படுத்தக்கூடும்.
  பாஜக தரப்புக்கு சோனியா மீதான விமரிசனங்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
  ******
  அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
  மாணவர்கள் போராட்டங்களை நசுக்க காவல்துறை மதுரை மீனாட்சி கல்லூரி, நந்தனம் கல்லூரி உள் ளிட்ட கல்லூரிகளில் மிக மோசமான தடியடிப் பிரயோகம், ரத்தக்களறிகளை ஏற்படுத்தியது. இன்றுவரை மாணவர் போராட்டம் தொடர்கிறது.
  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், தொழிலாளர் கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது தமிழகத்தில் தற்போது இயல்பான நடவடிக்கை ஆகிவிட்டது.
  ****** | 
											
											
												| 
 | 
											
											
											
												கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் உள்ள புராதனமான கோயில் மனோன்மணி அம்மன்- மணிமுத்தீஸ்வரர் கோயில். இங்கு குடமுழுக்கு தமிழ்முறைப்படி நடைபெற்றது. இதனால் கோயில் அர்ச்சகர்களுக்கும் தமிழர் அடியவர்கள், பக்தர் களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
  ஆகமவிதிப்படி தான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும். மாறாக நடைபெற்றாலும் தீமை விளையும் என அர்ச்சகர்கள் சங்கம் வலியுறுத்தியது.
  காஞ்சிசங்கராச்சாரியார்  ஆகமவிதிப்படிக்கு மாறாக கும்பாபிஷேகம்  நடைபெற்தை கண்டித்து கருத்து வெளியிட்டார். பின்னர் காஞ்சியாரின் கருத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேற தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. திமுக தலைவர் தமிழ்முறைப்படி குடமுழுக்கு விழா நடைபெற்றதற்கு ஆதரவு தெரிவித்தார்.
  கோயில் வழிபாடு என்பதுகூட அரசியல் சர்ச்சைகள் போலாகி வரும் சூழல் உருவாகி உள்ளது.
  ******
  சென்னை மேயரை குறியாக வைத்து ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஸ்டாலின் தனது மேயர் பதவியை இழந்தார். இந்த சட்டம் தொடர்பாக நடைபெற்ற வழக்கில். ஜெ அரசு அறிமுகப்படுத்திய ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடவே இன்னொரு தீர்ப்பில் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக மேயர் பதவி வகிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
  திமுக தரப்பில் இந்த தீர்ப்புகள் குறித்து பெரும் உற்சாகம் எதுவும் காணப்படவில்லை. அதிமுக தரப்பில் ஸ்டாலின் மேயராக நீடிக்கமுடியாது என்ற நிலையே போதும்.
  ******
  டான்சி நில ஊழல் வழக்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா சார்பில் ஆஜராகும் வக்கீல் வேணுகோபால் அதிக விலைக்கு அந் நிலத்தை வாங்கியிருந்தாலும் அதை தானமாக அரசுக்கு ஒப்படைக்க தயாராக உள்ளார். இதனால் எவ்வளவு பிரச்சனைகளை இவர் சந்தித்து விட்டார். எனவே இதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டுமென குறிப்பிட்டார்.			  
  துரைமடன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |