| லாடுகள் பலவிதம் அவல் லாடு
 பன்னீர் லாடு
 மோகன் லாடு
 பூந்தி லாடு (லட்டு)
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| தேவையான பொருட்கள் 
 பாதாம் பருப்பு - 1 கப்
 சர்க்கரை	- 3/4 கிண்ணம்
 ஏலப்பொடி	- சிறிது அளவு
 நெய்	- 1 மேசைக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 பாதாம் பருப்பைத் தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து, அதன் தோலை நீக்கவும்.  இவற்றில் உள்ள தண்ணீரை ஒரு நல்ல துணியால் துடைத்து நீக்கவும். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 
 அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து, கம்பிப்பதம் வரும்வரை பாகு வைக்கவும்.
 
 பின்னர் அரைத்த பாதாம் பொடியைச் சேர்த்து நெய் விட்டு, பத்து நிமிடம் கிளறவும். கிளறும்போது அடுப்பை மிதமாக எரியவிடவும்.
 
 அடுப்பில் இருந்து இறக்கி ஏலப்பொடி சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
 
 பின்குறிப்பு
 
 கம்பிப்பதம்: சிறிது பாகை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து சேர்த்து பின்னர் பிரித்தால் ஒரு நூல் இழை போல வரும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 லாடுகள் பலவிதம்
 அவல் லாடு
 பன்னீர் லாடு
 மோகன் லாடு
 பூந்தி லாடு (லட்டு)
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |