| சாம்பார் சாதம் மசாலா சாம்பார் சாதம்
 கத்தரிக்காய் சாதம்
 பன்னீர் சாதம்
 இஞ்சி சாதம்
 மிளகு சீரக சாதம்
 கடுகுப்பொடி சாதம்
 ஐங்காயப்பொடி சாதம்
 கதிரொளிச் சாறு - வாசகர் கைவண்ணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  அரிசிக்கு ஓர் அறிமுகம்! 
 இந்தியாவின் பாஸ்மதி அரிசியும், தாய்லாந்தின் ஜாஸ்மின் அரிசியும் தம்முடைய வாசனையால் உலகப் பிரசித்தி பெற்றன.
 
 அமெரிக்காவில் பல விதமான அரிசி வகைகள் உள்ளன:
 Southern Long Grain Rice
 California Medium Grain Rice
 Southern Medium Grain Rice
 California Mochi Rice
 Arborio rice
 Wild rice
 
 இதில் wild rice அரிசியே அல்ல. ஆழ்ந்த தண்ணீரில் விளைகின்ற ஒரு வகைப் புல்லின் விதைகள் இவை. இது மினசோட்டா பகுதிகளில் விளைகின்றது.
 
 ஆர்போரியோ அரிசி ரிஸோட்டோ செய்வதற்கு உகந்ததாகும். இது இத்தாலியில் அதிகமாக விளைகிறது. இப்போது கலி·போர்னியா பகுதிகளிலும் இது பயிரிடப்படுகிறது.
 
 அதிகம் தீட்டப்பட்ட அரிசி வெள்ளையாகவும், குறைவாக தீட்டப்பட்ட அரிசி பழுப்பு நிறமாவும் இருக்கும். எல்லா வகை அரிசிகளிலும் பழுப்பு வகை அரிசியில் (brown rice) நார்ச்சத்து (fiber content) அதிகம் உள்ளதால் இது உடலுக்கு மிகவும் நல்லது.
 
 இப்போது அரிசியில் தயாரிக்கும் உணவு வகைகளைப் பார்க்கலாம்.
 | 
											
												|  | 
											
											
												| காய்கறி சாதம் (Vegetable Rice) 
 தேவையான பொருட்கள்
 
 பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம்
 வெங்காயம் - 1/8 கிண்ணம் (நறுக்கியது)
 பூண்டு - 4 பல்
 பெரும் சீரகம் - 1/4 தேக்கரண்டி
 லவங்கப் பட்டை - 1 சிறிய துண்டு.
 ஏலக்காய்	- 1
 கிராம்பு	- 1
 சீரகம்	- 1/4 தேக்கரண்டி
 மிளகு	- 1/2 தேக்கரண்டி
 காரட், பட்டாணி, பீன்ஸ், காலி·ப்ளவர்-	1/2 கிண்ணம்
 ஆலிவ் எண்ணெய்	- 2 தேக்கரண்டி
 நெய்	- 1 தேக்கரண்டி
 உப்பு	- தேவைக்கேற்ப
 தண்ணீர்	- 1 3/4 கிண்ணம்
 
 செய்முறை
 
 மின்சார ரைஸ் குக்கரில் ஆலிவ் எண்ணெய், நெய் விட்டுக் காய்ந்ததும் பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம், மிளகு சேர்க்கவும். சற்று வறுபட்டபின்னர் அரிசியையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.
 
 காய்கறிகளையும், பூண்டையும் போட்டு அரை நிமிடம் வதக்கிய பின்னர் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு அடிமேலாக இரு முறை கிளறி பின்னர் மூடி வைக்கவும்.
 
 காய்கறி சாதம் பக்குவமான உடன் (அதாவது குக்கர் தானாக அணைந்ததும் அல்லது சூடாக வைத்திருக்கும் நிலைமையை அடைந்த உடன்) குக்கரைத் திறக்கவும். சூடாக உள்ள காய்கறி சாதத்தின் நடுவில் ஒரு கரண்டியால் ஒரு மிகச்சிறிய துளை அடிவரை செய்து, 1/8 கிண்ணம் சுத்தமான குளிர்ந்த தண்ணீரை விட்டு மூடி ரைஸ் குக்கரை அணைத்து விடவும். இப்படிச் செய்வதால் காய்கறி சாதம் (Vegetable Rice) பாத்திரத்தின் அடியில் பிடிக்காமல் இருக்கும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சாம்பார் சாதம்
 மசாலா சாம்பார் சாதம்
 கத்தரிக்காய் சாதம்
 பன்னீர் சாதம்
 இஞ்சி சாதம்
 மிளகு சீரக சாதம்
 கடுகுப்பொடி சாதம்
 ஐங்காயப்பொடி சாதம்
 கதிரொளிச் சாறு - வாசகர் கைவண்ணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |