| லாடுகள் பலவிதம் அவல் லாடு
 பன்னீர் லாடு
 மோகன் லாடு
 பாதாம் லாடு
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| தேவையான பொருட்கள் 
 கடலை மாவு	- 2 கிண்ணம்
 அரிசி மாவு		- 2 தேக்கரண்டி
 உப்பு		- 1 சிட்டிகை
 சர்க்கரை		- கிண்ணம்
 சமையல் எண்ணெய்	- பொரிப்பதற்கு தேவையான அளவு
 ஒடித்த முந்திரி பருப்பு 	- 1 கிண்ணம்
 உலர்ந்த கறுப்பு திராட்சை - கொஞ்சம்
 ஏலக்காய்ப் பொடி	- 1/2 தேக்கரண்டி
 டைமண்ட் கல்கண்டு	- 1/8 கிண்ணம்  (இந்தியன் கடைகளில் கிடைக்கும்)
 கேசரி பவுடர்	- ஒரு சிட்டிகை
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 சர்க்கரைப் பாகு செய்யும் முறை
 
 அடி கனமான வாணலியில் சர்க்கரை யுடன் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்கள் கொதித்து, கம்பிப்பதம் வந்தபின்பு கேசரிப் பவுடர் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
 
 பூந்தி செய்யும் முறை
 
 கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைக்கவும்.
 
 அடி கனமான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், பூந்தி செய்யும் தட்டை எண்ணெய்க்கு மேலே சற்று உயர இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் கரைத்த மாவில் ஒரு கரண்டி விட்டு, கரண்டியின் அடியால் நன்கு தேய்க்கவும்.
 
 பூந்தி முத்துக்கள் விழுந்து முடித்ததும், அவற்றை இரண்டு பக்கமும் வேகவிட்டு ஒரு வடிகட்டியில் வடியவைக்கவும். பூந்தியைப் பதமாக வேகவிடவும். ரொம்பக் கரகரப்பாக இருக்கக்கூடாது. எல்லா மாவையும் பூந்தியாக்கிக் கொள்ளவும்.
 
 லட்டு பிடிக்கும் முறை
 
 எண்ணெய் வடிக்கப்பட்ட பூந்தியை இளம் சூடான சர்க்கரைப் பாகில் போட்டுக் கலக்கவும்.
 
 நெய்யில் வறுத்து ஒடித்த முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த கறுப்பு திராட்சை, ஏலக்காய்ப் பொடி, கல்கண்டு எல்லா வற்றையும் போட்டுக் கலந்து, கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக உருட்டவும்.
 
 சூடு ஆறிய பின்பு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 லாடுகள் பலவிதம்
 அவல் லாடு
 பன்னீர் லாடு
 மோகன் லாடு
 பாதாம் லாடு
 பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
 கோதுமை மாவு பூரி லாடு
 கடலைமாவு லாடு
 பயத்த மாவு லாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |