Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |ஜூலை 2026|
Share:
ஒரு முக்கியமான தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் அல்லது அதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பிறந்த குழந்தைகள், அவர்களது பெற்றோர் சட்டரீதியாக அமெரிக்கக் குடிமக்கள் இல்லாவிட்டாலும், அமெரிக்கப் பிரஜை என்னும் அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிபர் ட்ரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்ற ஜனவரி 20, 2025 அன்று, இந்த உரிமையை ரத்துசெய்து ஓர் நிர்வாக ஆணை பிறப்பித்தார். அன்று முதலே இது விவாதத்திற்கு உரியதாக இருந்ததோடு, இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளன்று, நீதிமன்றத்துக்கு அதிபரே வந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 'பிறப்புரிமையாகப் பெறப்படும் குடியுரிமை' எனப்படும் இது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் உரிமை என்பதால், அதிபரின் ஆணை அதற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகக் குடிவந்தவர்களாகவோ, வேறுவகை தற்காலிக விசாக்களில் இருப்பவர்களோ ஆனாலும், அவர்களுக்கு அமெரிக்கப் பகுதியில் பிறந்த குழந்தைகளும், அமெரிக்காவில் இயல்புரிமை பெற்ற குடிமக்களும் (Naturalized Citizens) அமெரிக்கக் குடிகளே என்பதை இந்தத் தீர்ப்பு சந்தேமற உறுதிப்படுத்தி உள்ளது.

★★★★★


பழைய கப்பலின் பாகங்களைப் பிரித்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவது கப்பல் மறுசுழற்சி (Ship recycling) எனப்படும். உலக அளவில் இந்தத் துறையில் முதலிடத்தை பாரதம் பிடித்துள்ளது என வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இந்தத் துறையில் இந்தியாவின் சந்தைப் பங்கு (market share) 35.4% ஆக வளர்ந்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இந்தியா ஓராண்டில் 500 முதல் 600 கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்குத் தயாராக உள்ளது என்பதாகும். உலகத் தரமான சேவையை வழங்கும் பொருட்டு இந்திய அரசு பலவகை கொள்கைச் சீர்திருத்தங்களைச் செய்து, இந்தத் தொழிலுக்கு ஆதரவு வழங்கி வருவது இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

★★★★★


Bite the bullet என்று சொல்வதைத் தமிழக வீரர் 'லான்ஸ் நாயக்' ஏ. மீனாட்சிசுந்தரம் நிஜமாகவே செய்து காட்டியுள்ளார். காஷ்மீர் தீவிரவாதிகள் இவரை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதில் குண்டு வாய்வழியே புகுந்து வெளியேறிய போதும், தளராமல் இவர் அவர்களை துவம்சம் செய்திருக்கிறார். இவரை அட்டையில் தாங்குவதில் 'தென்றல்' பெருமைப்படுகிறது. சுவாமி சிவானந்த சரஸ்வதி, கே.பி. நீலமணி ஆகியோர் குறித்த கட்டுரைகளும், இரண்டு சத்தான சிறுகதைகளும் உங்களை மகிழ்விக்க வருகின்றன.
வாசகர்களுக்கு அமெரிக்கச் சுதந்திர நாள் வாழ்த்துகள்.

தென்றல்
ஜூலை 2026
Share: 




© Copyright 2020 Tamilonline