|
| காப்பாற்றும் கூக்குரல் |
   |
- | ஜூன் 2026 |![]() |
|
|
|
|
 |
இருண்ட இரவொன்றில் சிவனும் பார்வதியும் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தனர். ஒரு மரக்கிளைமேல் அமர்ந்திருந்த ஒருவன் கைகால் சோர்ந்து தரையில் விழப்போகும் நிலையில் இருப்பதைக் கண்டனர். பார்வதி தேவி, சிவனார் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிவபெருமானோ பார்வதி அவனைக் காப்பாற்ற வேண்டுமெனக் கூறினார்!
இதற்கிடையில், அவன் விழும் நிலைக்குச் சென்று விட்டான். விழும்போது அவன் "அம்மா" என்று கத்தினால் பார்வதி தேவி விரைந்து சென்று காப்பாற்ற வேண்டும் என்றும், "அப்பா" என்று கத்தினால், சிவன் உதவ வேண்டும் என்றும், எலும்புகள் முறியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.
அவன் கீழே விழுந்தான், ஆனால் அம்மா என்றோ அப்பா என்றோ கத்தவில்லை. "ஐயோ" என்று கத்தினான். அவனுக்கு உதவி கிட்டவில்லை.
நன்றி: சனாதன சாரதி, மார்ச் 2026 |
|
|
| பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|
|
|
|