|
| சாக்ரமெண்டோ தமிழ் மன்றம்: பொங்கல் விழா |
   |
- சந்தியா நவீன் | மார்ச் 2026 |![]() |
|
|
|
|
 |
2026 பிப்ரவரி 7ஆம் தேதி சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் பொங்கல் திருவிழாவை "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற பாரதியின் வரிகளின்படி இயற்கையைப் போற்றவும், உழவர் பெருமக்களை வாழ்த்தவும், சிறார்முதல் பெரியோர்வரை அனைவரும் ஒன்று கூடிமிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, உறியடி, பறையிசை, சிறுவர்க்கான விளையாட்டுகள், வாழை இலை விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் திரு ராஜாவும் திருமதி பாரதி பாஸ்கரும் கோலப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தார்கள். திரு ராஜா அவர்கள் தலைமையில் 'ஞாபக மறதி வரமா, சாபமா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. பாரதி பாஸ்கர் 'ஞாபக மறதி சாபமே' என்ற அணியிலும், திரு ஜேசு சுந்தரமாறன் 'வரமே' என்ற அணியிலும் வாதாடினர். சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் சார்பில் வாதிட்ட மேகநாதன் வளவன், திவ்யா தங்கதுரை, நாச்சம்மை செல்லப்பன், அமிர்த பாலகிருஷ்ணன், ஸ்ரீவித்யா சாய்கிருஷ்ணன், நந்திதா நித்யானந்தன் ஆகியோரின் வாதங்கள் சுவைபட இருந்தன.
விழாவையொட்டி முன்னமே நடத்தப்பட்ட திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ் மன்றத் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குடும்பங்களுக்கும், தமிழ் பள்ளிகளுக்கும் சாக்ரமென்டோ தமிழ் மன்றம் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. |
|
|
சந்தியா நவீன், சாக்ரமெண்டோ, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|
|
|
|