கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி: 50 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்
|
 |
|
 |
2025 ஜூன் 16 முதல் 18 வரை, உலகப் புகழ்பெற்ற யோகியும், தொலைநோக்குப் பார்வை கொண்டவருமான சத்குரு,,லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விஜயம் செய்து, வாழ்க்கை, மரணம் மற்றும் உள்நிலை நல்வாழ்வு குறித்த அறிவு குறித்து சக்திவாய்ந்த செய்தையைச் சரியான நேரத்தில் பகிர்ந்து கொண்டார். இது அவரது 'Death and Beyond' புத்தக வெளியீட்டுக்கான அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதி. விழிப்புணர்வோடு கூடிய வாழ்க்கை குறித்த அவரது போதனைகள் மீதும், அவரது யுஎஸ்ஏ டுடே பெஸ்ட் செல்லர் மற்றும் #1 அமேசான் பெஸ்ட் செல்லரான இந்த நூலைக் குறித்தும் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
புகழ்பெற்ற டால்பி திரையரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சத்குரு காலத்தின் ஓட்டம் மற்றும் மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அவசரத் தேவை குறித்துச் சிந்திக்கத் தூண்டினார்.
"நமது நேரமும் சக்தியும் குறிப்பிட்ட காலமே இருக்கும். இதுகுறித்து நாம் விழிப்புடன் இருந்தால், நமக்கு எது முக்கியமோ அதை மட்டுமே நாம் செய்வோம்" என்று அவர் சுட்டினார். "மரணம் வாழ்க்கைக்கு எதிரானது அல்ல - அது வேறொரு பரிமாணம். நமது மரணத்தைப்பற்றி நாம் உணர்ந்தால், மிக முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வோம்" என்றார்.
லட்சக்கணக்கான மக்களின் மனித நல்வாழ்வை மேம்படுத்தவும், பூமியில் நீடித்த தீர்வுகளை அமல்படுத்தவும் சத்குரு ஆற்றிய பணிகளுக்காக லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயர் கேரன் பாஸ் சத்குருவுக்கு பாராட்டுச் சான்றிதழ் ஒன்றை வழங்கினார்.
மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனம் குவிதலை மேம்படுத்தவும், மூளையின் ஆரோக்கியத்தை வளர்க்கவும் வடிவமைக்கப்பட்ட ஆதாரபூர்வமான, 7 நிமிட தினசரி தியானக் கருவியான 'Miracle of Mind' (MoM) செயலியை சத்குரு அறிமுகப்படுத்தினார். இது ஈஷா அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுக் காலத்தில் உருவாக்கப்பட்டது இந்தச் செயலி. ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் டாக்டர் பாலசந்தர் சுப்பிரமணியம் தலைமையிலான குழு சமீபத்தில் மதிப்பாய்வு செய்து, இது வழிநடத்தும் ஆழ்ந்த யோகத்தியானம் மூளையின் மூப்பை மாற்றியமைக்கும் என்று கண்டறிந்தது.
"மன அழுத்தம், பதட்டம், கோபம், வெறுப்பு - இவை இயல்பானவை அல்ல. நாம்தான் அவற்றை இயல்பாகக் கருதுகிறோம்," என்று சத்குரு குறிப்பிட்டார். "அகச்செயல்பாட்டை மாற்றி வடிவமைக்க யோகம் சிறந்த வழியாகும். அப்போது எனவே மனம் நமக்காக வேலை செய்யும், நமக்கு எதிராக அல்ல" என்றார்.
"மனிதனின் உடலமைப்பு இந்தக் கிரகத்தின் மிக அதிநவீன இயந்திரம், சரியான உள்பொறியியல் மூலம், நம் அன்றாட வாழ்வில் சமநிலை, தெளிவு மற்றும் இலக்கை அடைய முடியும்" என்று சத்குரு இங்கே வலியுறுத்தினார். |
|
செய்திக்குறிப்பில் இருந்து |
|
 |
More
கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி: 50 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்
|
 |
|
|
|
|
|