பரதநாட்டியம்: அனன்யா சந்திரமூர்த்தி
|
 |
|
 |
டிசம்பர் 15, 2024 அன்று ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி முதல் முறையாக அமெரிக்காவில் தமிழ்ப் பாடலாசிரியர் விழாவைக் கோலாகலமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி நியூ ஜெர்சியில் உள்ள ஃப்ளெமிங்டன் திருக்கோவில் ஸ்ரீ மஹாபெரியவா மணிமண்டபத்தில் நடைபெற்றது. கடந்த ஏழு வருடங்களாக ஸ்ருதிஸ்வரா மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக நடத்தி வந்தது. இந்த வருடம் அனைத்துத் தமிழ்ப் புலவர்களையும் போற்றும் வகையில் இந்த தினத்தை அரங்கேற்றியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சியைப் பத்து வயதான சிரஞ்சீவி. ஆயுஷ் நாதன் தனது இனிமையான குரலில் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்து, பங்குபெற்று, தமிழ்ப் பாடல்களை இசைத்தும், அவற்றுக்கு நடனமாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இந்த விழாவை ஸ்ரீ மஹாபெரியவா மணிமண்டபத்தின் தலைவர், திரு. சூரி சுப்ரமணியன் மற்றும் திருமதி. ஆர்த்தி சூரி தலைமை தாங்கிச் சிறப்பித்தனர்.

ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி இயக்குனர்கள் திருமதி. நிர்மலா ராஜேஷ் மற்றும் திரு. ராஜேஷ் நாதன் பாடிய மங்களத்துடன் விழா நிறைவெய்தியது.
நிகழ்ச்சியைக் கண்டு களிக்க: இணையதளம்: www.sruthiswara.com
பிற சமூக ஊடகங்கள்: யூட்யூப்: @Sruthiswara முகநூல்: @Sruthiswara இன்ஸ்டாகிராம்: @sruthiswaraschool |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
 |
More
பரதநாட்டியம்: அனன்யா சந்திரமூர்த்தி
|
 |
|
|
|
|
|