| சின்னச் சண்டை காதல் தழும்பு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | நீரின்றி அமையாது... |    |  
	                                                        | - ஷான் ![]() | ![]() பிப்ரவரி 2018 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| ஏய், வாங்கடி போகலாம்! என்று குடத்தோடு வந்த
 அண்டை அயல்வீட்டு
 ஆனந்தியக்கா செல்வியக்காவோடு
 
 நண்டும் சிண்டுமாய்
 சிறுகுடம் வாளியுடன்
 நாங்களும் பயணிப்போம்
 குளக்கரைக்கு நீரள்ள.
 
 திரைக்கதை திருவிழா
 தெருக்கதை ஊர்க்கதை
 முனியாண்டி பேத்திக்கு
 வரப்போகும் காதுகுத்து
 
 முன்தினம் பார்த்த
 தொலைக்காட்சி சினிமாவில்
 நடிகையின் அலங்காரம்
 அவரோட ஜிமிக்கி கம்மல்
 
 என்று…
 | 
											
												|  | 
											
											
												| நீளும் அரட்டையில்… தெருநிறைத்துச்
 சலசலக்கும் குரலொலிகள்
 கிசுகிசுக்கும் சிலநொடிகள்
 
 உறுமும் வாகனத்தில்
 இளவட்டங்கள் எதிரில்வர
 வெட்கித் தலைகுனியும்
 வெங்கலக்குரல் அக்காக்கள்
 
 சில நிமிட நடையினிலே…
 
 குளத்தில் படியிறங்கி
 உரையாடி நீரள்ளி
 சும்மாடு சுருட்டி
 குடங்கள் அதிலேற்றி
 
 அக்காக்கள் முன்செல்ல
 நாங்கள் பின்தொடர
 நன்றே முடிந்தது
 அன்றைய சோஷியலைசேஷன்!
 
 ஷான்,
 பென்டன்வில், அர்க்கான்சாஸ்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சின்னச் சண்டை
 காதல் தழும்பு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |