|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| பள்ளிச்சுவர் விளம்பரத்தில் மழலை தொலைத்த பிள்ளைகளின் படங்கள்.
 கீழே, மிஞ்சியிருந்த குறளின் ஒரு பாதி:
 'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'.
 
 சேமிப்பு
 உயர்தர வணிகவளாகத்தில்
 சிறுவனுக்கு மறுப்புச் சொல்லிக்கொண்டு இருந்தார்
 ஒரு பணக்காரக் குழந்தையின் ஏழைத் தந்தை.
 
 பயணம்
 விருந்துண்ட இலையை எறிந்து
 கையையும் கழுவினார் ஒருவர்
 ஓடும் பேருந்தில்!
 
 காதலுக்கு மரியாதை
 மனைவி மக்களுடன் சொந்த ஊருக்குச் செல்லும்போதும்
 பால்யத் தோழியின் வீட்டைத் தாண்டும்போது
 வண்டி மெதுவாகவே சென்றது!
 | 
											
												|  | 
											
											
												| உழைப்பு அறுபது வயது தாண்டியும் அதே கடையில்
 கடலைப் பருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தார்
 அந்தச் செட்டியார் கடை அண்ணன்.
 
 பால் வேற்றுமை
 அர்னால்டும் ஏஞ்சலீனாவும்
 நுழைவாயிலை அலங்கரித்தனர்
 சாலையோரக் கட்டணக் கழிப்பிடம்.
 
 செந்தில்,
 வாஷிங்டன் டி.சி.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |