|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| மேடையேறிய ஓராண்டுக் காலத்தில், வெற்றிகரமாக 70 காட்சிகளைக் கடந்துவிட்ட 'ஸ்ரீ தியாகராஜர்' இசைநாடகம் அமெரிக்காவுக்கு வருகிறது. 
 சங்கீத மும்மூர்த்திகளில், தமக்கெனத் தனியிடம் பெற்றவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சரித்திரத்தை, அவர் படைத்த கீர்த்தனைகளை அவருடைய வாழ்க்கையோடு இணைத்துச் சுவைபட சொல்கிறது. தமிழகம் தவிர இந்தியாவின் பல இடங்களிலும், துபாய், அபுதாபி ஆகிய இடங்களிலும் இது ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
 பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வீயெஸ்வி, கதை வசனம் எழுதியிருக்கிறார். கர்நாடக இசைக்கலைஞர் திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ இசையமைத்துள்ளார். ராமபக்தியிலும், நாமசங்கீர்த்தனத்திலும் திளைத்திருந்த தியாகப்பிரம்மமாகவே வாழ்ந்திருக்கிறார் டிவி வரதராஜன். அவரது யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினர் தத்தம் கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்திருக்கிறார்கள்.
 
 அமெரிக்க ரசிகர்களும் இந்த நாடகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் திரு. க்ளீவ்லேண்ட் சுந்தரம் இதனைப் பல இடங்களிலும் மேடையேற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். க்ளீவ்லேண்டில் இவ்வாண்டு நாற்பதாவது ஆண்டு தியாகராஜ ஆராதனையிலும் பிற இடங்களிலும் மேடையேற்றப் பணியாற்றுகிறார். இதுவரை எட்டுக் காட்சிகள் உறுதியாகியுள்ளன. இன்னும் குறைந்தது 12 காட்சிகளாவது அமையும்  என்னும் உறுதியுடன் இருக்கிறோம்.
 உறுதிசெய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்:
 3/10/2017	சான் டியகோ
 3/11/2017	லாஸ் ஏஞ்சலஸ்
 3/12/2017	சான் ஹோசே
 3/25/2017	இண்டியானபோலிஸ்
 3/26/2017	சிகாகோ
 4/01/2017	ஹூஸ்டன்
 4/13/2017	க்ளீவ்லேண்ட் ஆராதனை
 4/30/2017	நியூ யார்க் / நியூ ஜெர்சி
 
 விவரங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு கொள்க:
 வி.வி.சுந்தரம் - மொபைல் 0091 9841061528;  மின்னஞ்சல்: vvsundaram@yahoo.com
 | 
											
												|  | 
											
											
												| செய்திக்குறிப்பிலிருந்து | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |