குகன் கத்தி சண்டை சாவி ஜூலியும் நாலு பேரும் செய் சாவடி பாண்டியோட கலாட்டா தாங்கலை இணைய தலைமுறை
|
 |
|

காதலின் வேறொரு பரிணாமத்தைச் சொல்ல வருகிறது கொள்ளிடம். படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருப்பவர் நேசம் முரளி. லூதியா என்கிற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் வடிவுக்கரசி, ராமச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை அண்ணாமலை மற்றும் நேசம் முரளி எழுத ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நேசம் முரளி. படம் பற்றி இவர், "மனித இனத்தில் இருபது சதவிதம் பேர் அழகாகப் பிறக்கிறோம். மீதம் எண்பது சதவிகிதம் பேர் அழகு குறைவாகத்தான் பிறக்கிறோம். அழகு குறைவாக இருக்கும் எண்பது சதவிகிதம் பேர் ஒருதலையாகத்தான் காதலிக்க முடிகிறது. காதலைச் சொல்ல நினைக்கும்போதெல்லாம் 'இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு..?' நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும். அந்த மனசாட்சிதான் இந்தக் 'கொள்ளிடம்' படத்தின் கதைக் கரு." என்கிறார். |
|
அரவிந்த் |
|
 |
More
குகன் கத்தி சண்டை சாவி ஜூலியும் நாலு பேரும் செய் சாவடி பாண்டியோட கலாட்டா தாங்கலை இணைய தலைமுறை
|
 |
|
|
|
|
|