சிகரங்களை எட்டிய 'சுருதி சாகரம்' தமிழ்மொழி மறந்தும் மறுக்கப்படக் கூடாது - 'சிஷ்யா' பிரஹஷித்தா குப்தா
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | எங்கள் முயற்சிக்கு கிடைத்த பரிசு!- தென்றல்.காம் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - ஸ்ரீகாந்த் ராமபத்ரன், ரஞ்சனி ராமபத்ரன் | பிப்ரவரி 2002 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 சந்திப்பு:ஸ்ரீகாந்த் ராமபத்ரன் தொகுப்புதவி: ரஞ்சனி ராமபத்ரன் தென்றல்.காம் திருமதி. சிவகாமி உடன் ஒரு சந்திப்பு
  அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி அலைவரிசை என்ற பெருமையுடன் களமிறங்கியிருக்கும் தென்றல் வானொலி பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் நேயர்களுக்கு அளித்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காக செய்தி, கல்வி, வரலாறு மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்றல் வானொலியை திருமதி. சிவகாமி ராமையா மற்றும் அவரது கணவரான திரு. சொக்கலிங்கம் கருப்பையா இருவரும் இணைந்து தோற்றுவித்தனர்.
  பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள தென்றல் வானொலி தொடங்கப்பட்ட விதம், ஆரம்ப காலத்தில் தொடங்குவதில் சந்தித்த பிரச்சனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்தெல்லாம் தென்றல் வானொலியின் நிறுவனர்களில் ஒருவரான திருமதி. சிவகாமி ராமையா, 'தென்றல்' பத்திரிகையின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்...
  தென்றல் வானொலியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது வந்தது?
  மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் என் கணவர் திரு. சொக்கலிங்கம் அவர்களும் செய்திப் பக்கம் என்று ஒரு இணையத்தளம் உருவாக்கியிருந்தோம். இந்தியாவில் நடக்கும் செய்திகளை வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தெரிந்து கொள்வதுதான் அதன் நோக்கம். அதற்கு மக்கள் இங்கு நல்ல ஆதரவு தெரிவித்தார்கள். தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் ஒரு தமிழ் வானொலி கட்டாயம் இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அமெரிக்காவில் தினசரி தமிழ் நிகழ்ச்சிகள் வழங்கும் தமிழ் வானொலி எதுவும் இல்லாமல் இருந்தது. 'தேமதுர தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று மகாகவி பாரதியார் கூறியது போல அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி வளர முயற்சிகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. செய்திப்பக்கத்தையே ஒரு வானொலியாக மாற்றும் எண்ணம் அதனால் வந்தது. ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் ஏப்ரல் 23 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு தென்றல் வானொலி ஆரம்பித்தோம்.
  தென்றல் வானொலி ஒலிபரப்பில் உங்களுக்குப் பின்புலமாக முதுகெலும்பாகத் திகழும் உங்களது குழுவினர்கள் பற்றி...?
  நான் முழு நேரமும் என் கணவர் பகுதி நேரமாகவும் இங்கு வேலை செய்கின்றோம். எங்கள் குழுவினர்களில் பலர் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். சென்னையில் ஒரு கிளை அலுவலகமும் இருக்கிறது. அங்கே யிருந்தும் நிகழ்ச்சிகள் எங்களுக்கு இங்கே வருகிறது. எங்கள் குழுவினர் ஒவ்வொருவரும் independant-ஆக நிகழ்ச்சிகள் தயாரித்து எங்களுக்கு அனுப்புவார்கள்.
  எவ்வளவு நேயர்கள் உங்கள் நிகழ்ச்சியை கேட்கிறார்கள்?
  இன்றைய நிலவரப்படி தினமும் 5000 நேயர்கள் எங்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கி றார்கள். அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. 70-80% அமெரிக்காவிலிருந்தும், மலேசியா,சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் இருந்தும் நேயர்கள் நிகழ்ச்சிகளை கேட்கிறார்கள். மற்ற நாடுகளில் இருந்து இணையத் தொலைபேசியின் (free internetphone) மூலமாகவும் நேயர் விருப்பம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் எங்களுடன் பேசுகிறார்கள். 
  தினமும் எவ்வளவு நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறீர்கள்?
  தினமும் Eastern Time காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் ஒலிபரப்பப் படுகிறது. ஞாயிறு தோறும் Eastern Time காலை 9 முதல் 2 வரை.
  வானொலியின் நிகழ்ச்சி நிரல் பற்றி சொல்லுங்களேன்...
  நாங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கல்வி மற்றும் பல துறைகளில் பயன் தரக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளாகவே இல்லாமல் மற்ற நிகழ்ச்சி களும் தருகிறோம். 'வானமே எல்லை' என்ற நிகழ்ச்சியில் சாதனையாளர்களைப் பேட்டி எடுக்கிறோம். டாக்டர் அழகப்பா ராம்மோகன் (உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்), தொழிலதிபர் ஹரிகேசவன் போன்ற சாதனை யாளர்கள் அந்த நிகழ்ச்சியில் தங்களது ஆலோசனைகளையும், கருத்துகளையும் நேயர்களுக்குக் கூறுகிறார்கள். 'விண்ணைத் தொடும் வீதியில் இருந்து' என்ற நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஷண்முகம், அவரவர் தகுதிக்கு ஏற்றார் போல தொழில் செய்வதற்கு தேவையான தொழில் நுணுக்கங்களையும் அறிவுரைகளையும் கூறுகிறார். செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் வரும் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு இடையில் ஐந்து நிமிடங்கள் ஒலிபரப்படும் 'நலம்தானா' நிகழ்ச்சியில் உடல் நலத்துக்கு தேவையான (Health Tips) குறிப்புகள் தருகிறோம். 
  சிறுவர்களுக்கு கதை நேரம் பகுதியும் உண்டு. 'மருத்துவரை சந்திப்போம்' நிகழ்ச்சியில் மருத்துவ வல்லுனர்கள் பல பயனுள்ள தகவல்கள் வழங்குகிறார்கள். வளரும் கலைஞர்' நிகழ்ச்சியில் பல துறைகளில் வளர்ந்து வரும் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். வளைகுடாப் பகுதியில் நடைபெற்ற தில்லானா இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் அல்பெனி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்துள்ளோம். நேரடி ஒலிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்தால் கூட இந்த நிகழ்ச்சியை உடனுக்குடன் இணையத்தின் வாயிலாக கேட்க முடிகிறது. இன்னும் நிறைய தமிழ் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. தென்றல் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் ஒலிநாடாவில் பதிவு செய்து எங்களுக்கு அனுப்பலாம்.கதை, கட்டுரைகளை எழுதி மின்னஞ்சல் (mailto:sivachok@thendral.com) மூலமாகவும் அனுப்பலாம்.
  FM/AM... வானொலி ஏன் ஆரம்பிக்கவில்லை?
  இது நல்ல கேள்வி. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் ஒரே பகுதியில் உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் நேயர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வானொலி தொடங்குவது என்பது இயலாத காரியம். இணையத்தின் மூலமாகத்தான் எல்லா நேயர்களையும் சென்றடைய முடியும்.
  உங்களது முயற்சியில் (in terms of content, contribution, funding, distribution) நீங்கள் என்னென்ன இடையூறுகளை சந்திக்க வேண்டி இருந்தது?
  இது நல்ல கேள்வி. இப்பொழுது audio streaming பண்ணுகிறோம். இதுவே text based இணையத்தளம் என்றால் bandwidth பிரச்சினை இருக்காது. நேயர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது bandwidth consumption அதிகம் ஆகிறது. அதற்கு அதிகம் தொகை செலவாகிறது. சில நேயர்கள் கேட்கும் ஆர்வம் இருந்தும், கணினியை உபயோகிக்க தெரியாதவர்களாகவோ அல்லது தொலை வலை தொடர்பு (internet connection) இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். FM வானொலி என்றால் இந்த பிரச்சினை எல்லாம் இல்லை. எங்களைப் போல Media வில் வேலை செய்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக விடுமுறை எடுக்க முடியாது. time commitment மிகவும் முக்கியம். நிதியுதவி (funding) பற்றி கேட்டு இருந்தீர்கள். ஒரு நிதி திரட்டும் (fundraiser) நிகழ்ச்சிக்கு நேயர்கள் நல்ல ஆதரவு தெரிவித்தார்கள். விளம்பரங்கள் மூலம்தான் அடிப்படை பொருளாதார உதவி கிடைக்கிறது. | 
											
											
												| 
 | 
											
											
											
												உங்களுடைய இந்த முயற்சியில் தமிழ் சங்கங்கள், தமிழ் மக்களின் பங்களிப்பு பற்றியும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பற்றியும் சொல்ல இயலுமா?
  நாங்கள் வருடா வருடம் நடக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை (FEDERATION OF TAMIL SANGAMS OF NORTH AMERICA) மாநாட்டில் பங்கேற்கிறோம். FETNA President மிகுந்த ஆதரவு தந்திருக்கிறார்கள். தமிழ் சங்கங்களுடன் இணைந்து பொங்கல், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பும் நோக்கமும் உள்ளது. தமிழ் மக்கள் நாம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு தந்தால் தான் இன்னும் சிறப்பாக செய்ய இயலும். இப்பொழுது ஒத்துழைப்பு தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மென்மேலும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
  தென்றல் வியாபார நோக்கத்துக்காக ஆரம்பித்தீர்களா அல்லது சமூக சேவை செய்யும் நோக்கத்துக்காகவா?
  சமூக சேவை மட்டும் தான் என்றால் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்திருக்க முடியாது. முழுக்க முழுக்க வியாபார நோக்கம் என்றும் சொல்ல இயலாது. தமிழுக்கு சேவை செய்யும் நோக்கமும் இருந்தது. பயனுள்ள தொழில் செய்யும் எண்ணமும் இருந்தது.அதனால் இரண்டும் பாதி பாதி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
  ஏப்ரல் 2002-ல் தென்றல் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிய போகிறது, எதிர்காலத்தில் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
  இப்போது real media player மூலமாக ஒலிபரப்பு செய்கிறோம். january 1, 2002 முதல் real audio format-ல் கூட தென்றல் கேட்க முடியும்.தென்றலில் தினமும் இப்போது 3 மணி நேரம் ஒலிபரப்பு செய்கிறோம், அதை 24 மணிநேரமாக ஆக்க உள்ளோம்.இதன் முக்கிய நோக்கம் அமெரிக்காவில் தமிழ் மொழி வளர வேண்டும்.இங்கே வளர்கின்ற குழந்தைகள் தயக்கம், அச்சம் நீங்கி தங்கு தடையின்றி தமிழில் பேச வேண்டும்.அதற்கு உதவி புரிகின்ற நிகழ்ச்சிகள் அதிகமான எண்ணிக்கையில் வழங்க உள்ளோம்.
  உங்களைப்பற்றியும் உங்கள் கணவரைப் பற்றியும் சொல்லுங்களேன்?
  பிஷப் ஹீபர் கல்லூரியில் நான் MCA படித்தேன். சிங்கப்பூரில் மென்பொருள் வல்லுனர்(software engineer) ஆக பணியாற்றி னேன். என் கணவர் RPI யில் PHD. senior scientist ஆக பணி செய்கிறார். என் தந்தைக்கு இலக்கிய ஆர்வம் அதிகம். என்னையும் இலக்கியங்கள் படிக்க சொல்வார். அதனால் சிறு வயது முதலே தமிழில் ஈர்ப்பு ஏற்பட்டது. software engineer ஆக இருப்பது இணையத்தில் ஒலிபரப்பு செய்வதற்கும், இணையத்தளம் அமைப்பதற்கும், server setup செய்வதற்கும் மற்றும் பல செயல்களுக்கும் உதவியாக உள்ளது.
  ஆரம்பம் முதல் நீங்கள் தென்றல் வானொலிக்காக செய்த முயற்சிகளையும் பட்ட சிரமங்களையும் இப்பொழுது நினைத்துப்பார்க்கும் பொழுது அதற்கான பலன் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா? உங்களது முயற்சியில் எந்த அளவு வெற்றி அடைந்துள்ளீர்கள்?
  funding மட்டுமல்லாது இதற்கான நேர ஒதுக்கீடு மற்றும் விடாமுயற்சி ஆகியவை மிகவும் முக்கியம். அதற்காக தினமும் மிகவும் பாடுபட்டோம். ஒரு நாள் ஒலிபரப்பு தடைப்பட்டாலும் அது மிகுந்த அளவில் பாதிக்கும். அதற்காக சொந்த வாழ்க்கையில் பல தியாகங்கள் புரிய வேண்டி இருந்தது. அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
  ஆரம்பத்தில் 30 ஆக இருந்த நேயர்கள் எண்ணிக்கை இப்பொழுது ஐயாயிரத்தை எட்டியுள்ளது என்றால் அதுவே எங்களது முயற்சிக்கு கிடைத்த பரிசு என்றே கருதுகிறோம்.
  சந்திப்பு:ஸ்ரீகாந்த் ராமபத்ரன் தொகுப்புதவி:ரஞ்சனி ராமபத்ரன் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  சிகரங்களை எட்டிய 'சுருதி சாகரம்' தமிழ்மொழி மறந்தும் மறுக்கப்படக் கூடாது - 'சிஷ்யா' பிரஹஷித்தா குப்தா
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |