Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Dr.Palani Gopal (India)

Comments Home
Comments by Dr.Palani Gopal (4)
Article: "நான் அமெரிக்காவிற்குக் குடிபெயரவில்லை" - கே.ஜே. யேசுதாஸ்
Category: நேர்காணல் (May 2004) Posted On: Jun 20, 2014
ஐயா, கர்நாடக சங்கீதம் அறிந்தவன் இல்லை. ஏதேனும் கேட்க வேண்டும் என்பதாலும் கேட்கவில்லை. என் மனதில் நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் ஒரு ஆவலால் கேட்கிறேன். இசைஞானி அவர்களின் இசை இயக்கத்தில் உங்களின் கணீர்க்குரலில் ஒலிக்கும் "மரிமரி நின்னே" எனும் பாடல் நான் அடிக்கடி கேட்டு உருகும் ஒரு பாடல். இந்தப்பாடல் வழக்கமான ராகத்தில்(?) இல்லாமல் வேறு புதிய முயற்சியாக (? மரபு மீறிய) ராகத்தில் பண்ணமைக்கப்பட்டதாக ஒரு செய்தியை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆமெனில், இது பற்றி விளக்க முடியுமா? வழக்கமான ராகத்தில் எவரேனும் பாடி இருக்கும் பாடல் கிடைக்கும் விவரம் தெரிவிக்க முடியுமா அன்புடன், மரு.பழநி கோபால்

Article: 'குறளரசி' கீதா அருணாச்சலம்
Category: சாதனையாளர் (Apr 2014) Posted On: Jun 20, 2014
கடல் கடந்த சாதனையாளர், என்ன விவரம் எனப்பார்ப்போம் என்று உள் நுழைந்தால்...............அட............. கல்லூரிக் காலத்தில் இருந்து இன்றும் உணர்ந்து (அவர் எழுத்தைத்தான்) மகிழும்..........மயங்கும் எம் கவிஞர் கண்ணதாசனின் மடியேறி விளையாடியவரா நீங்கள். தமிழ் உங்களிடம் கொஞ்சும் காரணம் புரிகிறது. வாழ்த்துக்கள். அன்புடன், மரு.பழநி கோபால்

Article: ஃபுல்பிரைட் கல்வி நிதியம் பெற்றோர்
Category: சாதனையாளர் (Jan 2014) Posted On: Jun 20, 2014
இந்நிதியத்தின் பயனாளிகளுள் இந்தியரே அதிகம் எனும் செய்தி மன நிறைவாக இருக்கிறது. இன்னமும் கூடுதலான ஆர்வலர்கள் பயனடைய வேண்டி, தொடர்பு விவரங்களை நீங்கள் அளித்துள்ள அக்கறை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கட்டுரையில் காணும் இரு சாதனையாளர்களுக்கும் வாழ்த்துக்கள். மரு.பழநி கோபால்

Article: ஒருவரிக் குறளே!
Category: கவிதைப்பந்தல் (Jun 2011) Posted On: Jun 19, 2014
தாயகம் தாண்டி வாழ்ந்தாலும், தாய்த்தமிழோடு உங்கள் உறவாட்டம் அருமை தோழரே. "நடை வரும்போது கன்னத்திலும் விடைபெறும்போது கண்ணிலும்............." உங்கள் சொல்லாடலின் உச்சம் பாராட்டுக்கள்..........தவறு...... என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள். அன்புடன் மரு.கோபால் பழநி





© Copyright 2020 Tamilonline