Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி-Mar 2016
6 Comments
By: Hari Krishnan (India) Mar 16, 2016 - My other reviews << Return to Article
அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம். இங்கே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கான உடனடி விளக்கமாக இங்கே சுருக்கமாகத் தருகிறேன். யுத்தத்தின் முதல் வருணை இங்கே இருக்கிறது: http://www.sacred-texts.com/hin/m06/m06013.htm அது இப்படித் தொடங்குகிறது: "Sanjaya said,--'I am Sanjaya, O great king. I bow to thee, O bull of Bharata's race. Bhishma, the son of Santanu and the grandsire of the Bharatas, hath been slain. That foremost of all warriors, that grandsire of the Bharatas, hath been slain. That foremost of all warriors, that embodied energy of all bowmen, that grandsire of the Kurus lieth to-day on a bed of arrows. That Bhishma. O king, relying on whose energy thy son had been engaged in that match at dice, now lieth on the field of battle slain by Sikhandin. மீதத்தைச் சுட்டியில் படிக்கலாம். பீஷ்ம பர்வம் 13ம் அத்தியாயத்தில் சஞ்சயன் யுத்த வருணனையைத் தொடங்கும்போது, 'பீஷ்மர் வீழ்ந்தார்' என்று சொன்படி தொடங்குகிறான். 'எப்படி விழுந்தார்' என்று திருதிராஷ்ரன் கேட்க, முதல் பத்து நாளில் நடந்தனவற்றின் சுருக்கத்தைச் சொல்லிவிட்டு, யுத்த ஆரம்பத்தில் கண்ணன் பகவத் கீதையை உபதேசித்தார் என்று சொல்வது 19ம் அத்தியாயத்தில் தொடங்குகிறது. அதாவது நாம் பகவத் கீதையின் அறிந்திருக்கும், 'தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே' என்று தொடங்கும் அர்ஜுன விஷாத யோகம், ஆறு அத்தியாயங்கள் கழித்தே தொடங்குகிறது. அடுத்ததாக சஞ்சயன் துரோணர் விழுந்ததும் திரும்ப வந்து நடந்தனவற்றைச் சொல்கிறான், அதற்கடுத்தது கர்ணன் இறந்ததும் வந்து சொல்கிறான். இடையில் ஒருமுறை (கர்ண பர்வத்தில்) 'நீ எப்போதும் போர்க்களத்தில்தானே இருப்பாய். இந்த ஆலோசனையை ஏன் உரிய நேரத்தில் கர்ணனுக்குச் சொல்லவில்லை' என்று திருதிராஷ்டிரன் கேட்க அதற்கு சஞ்சயன் விளக்கமளிக்கிறான். வரும் தவணைகளில் விவரமாகச் சொல்கிறேன். சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆதார பூர்வமாகவே சொல்கிறேன். எனவே நம்பிக்கையோடு இருக்கவும். உரிய ஆதாரங்களை உரிய இடத்தில் தருவேன்.

By: Chinnaswamy (India) Mar 12, 2016 - My other reviews << Return to Article
அன்புள்ள ஸ்ரீ ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். சஞ்சயன் தினமும் யுத்தபூமியில் இருந்தான் என்கிறீர்கள். மகாராஜா முன்னிலையில் அவ்வப்போது நடக்கும் நிகழ்சிகளை விவரித்துக் கொண்டும் அதே நேரத்தில் யுத்தபூமியிலும் இருக்க அவனுக்கு double acting எப்படி சாத்யம்? உங்களன்புள்ள vcs

By: Chinnaswamy (India) Mar 12, 2016 - My other reviews << Return to Article
Dear Sri Hari krishnan, I too endorse the view of Sri VPSarathy. If Sanjayan was not in front of Dridrushatran telling the happenings will he not be asked by the King about his whereabouts? Yours VCS

By: Hari Krishnan (India) Mar 10, 2016 - My other reviews << Return to Article
அன்புள்ள திரு. சாரதி--அவசரமாக ஒரு திருத்தம். சஞ்சயனுக்கு ஞானக்கண் கொடுக்கப்பட்டது பொய்யில்லை. வியாசர் அவருக்கு அப்படியொரு சக்தியை வழங்கியது உண்மைதான். ஆனால் சஞ்சயன் அன்றாடம் அவருக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சியைப் போலப் பார்த்தபடி சொல்லிக்கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் முதல் வருணனையே (கீதோபதேசத்திலிருந்தில்லை) பீஷ்மர் இறந்தார் என்ற செய்தியோடு தொடங்குகிறது. அடுத்தது துரோணர், அதற்கடுத்தது கர்ணன் அதற்கும் அடுத்தது துரியோதனன் இறந்த செய்திகளோடு யுத்தகளத்திலிருந்து சஞ்சயன் வருவது சொல்லப்படுகிறது. இந்த தொலைப் பார்வைக்கு வேறொரு அவசியம் இருந்திருக்கிறது. யுத்தகளத்தின் விஸ்தீரணம் சுமார் 150 கிலோமீட்டரைத் தொடும். அதாவது பெங்களூர் தொடங்கி மைசூரையும் தாண்டிய களம். சஞ்சயன் ஒரு மூலையில் இருக்கும்போது மற்ற எந்த மூலையில் இருப்பதையும் அறிவதற்கான பார்வை அது. வரும் தவணைகளில் விரிவாகச் சொல்கிறேன்.

By: Krishna Achutha (India) Mar 10, 2016 - My other reviews << Return to Article
Hari Anna, I am very happy that You have devoted full time on these Two Ithihasams. New ideas are emerging in each and every issue of yours.

By: VPSarathy (India) Mar 09, 2016 - My other reviews << Return to Article
அன்புள்ள ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு, வணக்கம். இந்த இதழின் தலைப்பே அபாரம். பார்த்த சாரதியைப் பற்றி சொல்லும் வேளையில் பார்த்திராத சாரதி என்று தலைப்பிட்டு அமர்களப்படுத்தியுள்ளீர்கள். சஞ்சயன் தன் ஞானக்கண்ணால் பார்ப்பதாக சொல்வதெல்லாம் பொய், உன்மையில் அவன் தினமும் யுத்தபூமியில் இருந்தான் என்ற புதிய தகவல் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.





© Copyright 2020 Tamilonline