|
இலங்கை எதிரிகள் குடியிருக்கும் கோட்டை |
|
- அரவிந்த்|ஆகஸ்டு 2009| |
|
|
|
இலங்கை இப்போது நம்முடைய எதிரிகள் குடியிருக்கும் கோட்டையாக மாறிக்கொண்டு இருப்பதை இந்தியா முதலில் உணர வேண்டும். சீனாவும் பாகிஸ்தானும் அங்கு நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்து விட்டன. இந்தப் பேராபத்து இன்னும் சில மாதங்களில் வெளிச்சத்துக்கு வரப் போகிறது. - டாக்டர் ராமதாஸ்
எந்தப் பெற்றோரும் உடை, பண்பாடுகள் பற்றி தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு எந்த போதனைகளும் செய்வதில்லை. பெண்களை ஆபாச நுகர்வுப் பண்டமாகப் பார்க்கும் போக்கிலிருந்து, தங்கள் ஆண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் மீட்டெடுக்க வேண்டும். - அருள்மொழி, வழக்கறிஞர்
ஏழைகளுக்கு உதவி செய்வது பற்றி எல்லா சமயமுமே ஒருமித்த கருத்தைச் சொல்கிறது. ஏழைகளின் எதிர்பார்ப்புகளை வசதி படைத்தவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம் - இவை இரண்டும் இதுவரை இல்லாத மக்களிடம் போய்ச்சேர வேண்டும். - நா. மகாலிங்கம்
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி 2004ம் ஆண்டில் இந்தியாவில் 3.3 கோடி நீரிழிவு நோயாளிகள் இருந்தனர். 2030ம் ஆண்டில் உலகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகள் (8 கோடி) இந்தியாவில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. - குலாம் நபி ஆசாத் |
|
அரவிந்த் |
|
|
|
|
|
|
|