இலங்கை எதிரிகள் குடியிருக்கும் கோட்டை
இலங்கை இப்போது நம்முடைய எதிரிகள் குடியிருக்கும் கோட்டையாக மாறிக்கொண்டு இருப்பதை இந்தியா முதலில் உணர வேண்டும். சீனாவும் பாகிஸ்தானும் அங்கு நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்து விட்டன. இந்தப் பேராபத்து இன்னும் சில மாதங்களில் வெளிச்சத்துக்கு வரப் போகிறது.
- டாக்டர் ராமதாஸ்

எந்தப் பெற்றோரும் உடை, பண்பாடுகள் பற்றி தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு எந்த போதனைகளும் செய்வதில்லை. பெண்களை ஆபாச நுகர்வுப் பண்டமாகப் பார்க்கும் போக்கிலிருந்து, தங்கள் ஆண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் மீட்டெடுக்க வேண்டும்.
- அருள்மொழி, வழக்கறிஞர்

ஏழைகளுக்கு உதவி செய்வது பற்றி எல்லா சமயமுமே ஒருமித்த கருத்தைச் சொல்கிறது. ஏழைகளின் எதிர்பார்ப்புகளை வசதி படைத்தவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம் - இவை இரண்டும் இதுவரை இல்லாத மக்களிடம் போய்ச்சேர வேண்டும்.
- நா. மகாலிங்கம்

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி 2004ம் ஆண்டில் இந்தியாவில் 3.3 கோடி நீரிழிவு நோயாளிகள் இருந்தனர். 2030ம் ஆண்டில் உலகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகள் (8 கோடி) இந்தியாவில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- குலாம் நபி ஆசாத்

அரவிந்த்

© TamilOnline.com