இளந்தென்றல் கணிதப் புதிர்
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | கணிதப்புதிர்கள் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - அரவிந்த் | டிசம்பர் 2010 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												1. 59 பேர் அடங்கிய மாணவர்கள் சுற்றுலாச் சென்றனர். அவர்களை அழைத்துச் செல்ல சில வேன்களும், கார்களும் வந்தன. வேன்களில் 9 பேர் மட்டுமே அமர முடியும். காரில் 4 பேர்கள் அமரலாம். மாணவர்கள் அவற்றில் ஏறி அமர்ந்ததும் எந்த ஒரு இடமும் காலியிக இருக்கவில்லை என்றால் வேன்கள் எத்தனை, கார்கள் எத்தனை?
  2. ஒரு குடும்பத்தில் நிறைய சகோதர, சகோதரிகள் இருந்தனர். ஒருவனுக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தனரோ அதே எண்ணிக்கைக்குச் சகோதரிகளும் இருந்தனர். ஆனால் ஒரு சகோதரிக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அதில் பாதி எண்ணிக்கையில்தான் சகோதரிகள் உள்ளனர். அப்படியானால் மொத்த சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 
  3. ராமனிடம் 17 மாடுகள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அதில் முதலாமவன் மாடுகளில் பாதியையும், இரண்டாமவன் மூன்றில் ஒரு பங்கையும், முன்றாமவன் ஒன்பதில் ஒரு பங்கையும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அது போன்று பிரிக்க இயலாத அவர்கள் தங்கள் ஆசிரியரை நாடினர். அவர் மிகச் சரியாக அவற்றைப் பிரித்துக் கொடுத்தார். அவர் எப்படிப் பிரித்துக் கொடுத்திருப்பார்?
  4. ராமுவின் பையிலிருந்த ஒரு புத்தகத்தின் சில பக்கங்களை ஒரு குழந்தை கிழித்து எறிந்து விட்டது. அது கிழித்த பக்கங்களின் எண்கள் 6, 7, 32, 63, 64, 91, 92 என்றால் கிழித்த மொத்தத் தாள்கள் எத்தனை?
  அரவிந்த் | 
											
											
												| 
 | 
											
											
											
												| விடைகள் 1. மாணவர்களின் மொத்த எண்ணிக்கை = 59 வேனில் அமர முடிந்தவர்களின் எண்ணிக்கை - 9; கார்களில் அமர்பவர்கள் - 4 1 வேன், 1 காரில் அமர முடிந்தவர்கள் - 13 2 வேன், 2 கார்களில் அமர முடிந்தவர்கள் - 26 3 வேன், 3 கார்களில் அமர முடிந்தவர்கள் - 39 எஞ்சியுள்ள 20 பேர் 5 கார்களில் அமரலாம் 3 வேன், 8 கார்களில் அமர முடிந்தவர்கள் = 27 + 32 = 59.
  2. 4 சகோரர்கள், 3 சகோதரிகள்
  3. மொத்த மாடுகளின் எண்ணிக்கை = 17. அதைச் சரிபாதியாகவோ மூன்றில் ஒரு பங்காகவோ அல்லது ஒன்பதில் ஒரு பங்காகவோ பிரிக்க இயலாது. அதனால் ஆசிரியர் தன்னிடம் இருந்த மாட்டையும் அதோடு சேர்த்துக் கொண்டார். அதன்படி 17 + 1 = 18 மாடுகள். முதலாமவனுக்கு அதில் பாதி = 18 / 2= 9 இரண்டாமவனுக்கு மூன்றில் ஒரு பங்கு =    18 / 3 = 6 மூன்றாமவனுக்கு ஒன்பதில் ஒரு பங்கு = 18 / 9 = 2 மொத்தம் = 9 + 6 + 2 = 17. எஞ்சிய தனது மாட்டை தனது வீட்டுக்கு ஓட்டிச் சென்றார் ஆசிரியர். 
  4. ஐந்து தாள்கள். 6, 7, 32 போன்றவை தனித்தனிப் பக்கங்கள்; 63, 64, 91, 92 ஆகியவை ஒரே தாளின் இரு புறத்து எண்கள். அகவே மொத்தம் ஐந்து தாள்களை குழந்தை கிழித்திருக்கும்.  | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  இளந்தென்றல் கணிதப் புதிர்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |