Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நேர்காணல்
பலகுரல் பாடகர் ஐங்கரன்
டாக்டர் சி.சந்திரமௌலி
குவாண்டம் இயற்பியலும் குண்டலினி யோகமும்: டாக்டர் G.கிருஷ்ணகுமார்
- காந்தி சுந்தர்|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeடாக்டர் G.கிருஷ்ணகுமார் டெட்ராய்ட் நகரில் சீரணமண்டலவியல் (கேஸ்ட்ரோ என்டராலஜி) மருத்துவர். 2007ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மிச்சிகன் ஹெரிடேஜ் தனது ஹால் ஆஃப் ஃபேமில் சேர்த்து இவரை கெளரவித் துள்ளது. டெட்ராய்ட்டில் புகழ்பெற்ற அரங்கங்களில் ஒன்றான கோபோ ஹாலில் இவரது புகைப்படத்தைக் காணலாம். 2004ம் ஆண்டு ஈஸ்டர்ன் மிச்சிகன் பல்கலைக் கழகத்தின் தொழில் முனைவோர் மையப் பிரிவு இவரைத் தனது ஹால் ஆஃப் ஃபேமில் கெளரவித்துள்ளனர். குவான்டம் இயற்பியல் பற்றித் தொடர்ந்து பேசும் ஞானமுள்ள குமார், இந்து சமய சம்பிரதாயங்களுக்கு விஞ்ஞான பூர்வ விளக்கங்களை அள்ளி வீசுகிறார். சம்ஸ்கிருதமே கற்காத இவர் மந்திரங்களின் அர்த்தங்களை விவரிக்கிறார். அதே சமயம் காபாலிசம், சூஃபியிசம், நாஸ்டிக் கிறிஸ்தவம் போன்றவற்றைப் பற்றி பிற சமய அன்பர்கள் மத்தியில் பிரசங்கம் செய்கிறார். தமிழில் நல்ல பயிற்சி கொண்டவர்.

'எல்லாம் குண்டலினி மூலம் அம்பாள் கொடுத்த சக்தி' என்கிற குமார், ஆலயப் பணியும் செய்து வருகிறார். டெட்ராய்ட்டில் பாண்டியாக் நகரத்தில் ஆகம சாஸ்திரப்படி இவர் கட்டி நிர்மாணித்து வரும் 'பராசக்தி' கோவில் (www.parashakthitemple.org/) சுற்று வட்டாரங்களில் மிகப் பிரபலம்.

டாக்டர் குமாருடன் உரையாடியபோது....

கே: குண்டலினி என்றால் என்ன?

ப: குண்டலினி என்பது நம் சுய உணர்வு. நம் மூலாதாரத்தில் பொதிந்து கிடக்கிறது. இதனை நாம்தான் தியானம் மூலம் தட்டி யெழுப்ப வேண்டும். மனிதர்களுக்கு மட்டு மல்ல, மிருகங்களுக்கும் குண்டலினி உண்டு. சொல்லப் போனால் ஒவ்வொரு பொருளுக் குள்ளும் இந்தச் சக்தி உள்ளது. இதற்கு சென்ஷயன்ஸ் (sentience) என்று பெயர். ஜடப் பொருட்களுள்ளும் இந்த சக்தி உண்டு. இதுவே உலகத்தில் இயங்கும் சக்தியாக மாறுகிறது.

கே: உங்கள் இளமைப் பருவம்...

ப: நான் சென்னையில் மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தவன். தந்தை பெயர் கணபதி. சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதுவ ரகத்தில் பணி செய்தார். தயா஡ர் ஹம்சா இல்லத்தரசி. தந்தை ஆன்மீக நாட்டம் கொண்டவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பல மணி நேரம் செலவிடுவார். அதன் கொள்கை களை வாழ்விலும் பின்பற்றி எங்களுக்கும் கற்றுக் கொடுத்தார். நான் சென்னையில் MBBS படிப்பை முடித்து 1964ல் மேற் படிப்புக்காக அமெரிக்கா வந்தேன். முப்பத் தோராம் வயதில் டெட்ராய்ட் வேய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் இணை ஆசிரியர் பதவியில் அமர்ந்தேன். 34-35 வயதிற்குள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி முடித்தேன்.

கே: கோவில் கட்டும் எண்ணம் தோன்றியது எப்படி?

ப: நான் குண்டலினி தியானம் செய்யும் போது அம்பாள் தோன்றி தனக்கு ஒரு ஆலயம் கட்டுமாறு என்னைப் பணித்தாள். சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் என் ஏட்டைப் பார்த்தபோது அவர் நான் ஆலயம் கட்டுவதை நாடியில் படித்து விளக்கினார். மேலும் ஆலயத்தின் பூமி அமைப்பு, மதுரை மீனாட்சியம்மன் கோவி லின் பூமி அமைப்பைப் போலவே இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் பாண்டியாக் நகரத்தில் தேவி பராசக்தி கருமாரியம்மனுக்கு 'எடர்னல் மதர் டெம்பிள்' என்ற பெயரில் ஆலயத்தைக் கட்டினேன். ஆலயத்துக்கு வேண்டிய யந்திரங்களைச் செய்து கொடுத்துப் பிரதிஷ்டை செய்தவர் காலஞ்சென்ற டாக்டர் V.V.ஸ்வர்ண வேங்கடேச தீட்சிதர்.

கே: மதம், ஆன்மீகம் இவற்றுக்கிடை யிலான வேற்றுமை என்ன?

ஆத்மாவைத் தேடிச் சென்று 'நான் யார்?' என்ற ஆத்ம விசாரணை செய்வது ஆன்மீகம். ஆன்மீகம் சமயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆன்மா என்பது ஸ்திரமானது, அழிவற்றது.
ப: மதம் என்பது சமய-சம்பிரதாயங்களை நன்குணர்ந்து அவற்றைப் பின்பற்றுவது. இது அடிப்படையில் தேவைதான். மனிதனை ஒரு கோட்பாட்டினுள் நிறுத்தி முதிர்ச்சியைத் தருவது மதம். இதையும் தாண்டி ஆத்மாவைத் தேடிச் சென்று 'நான் யார்?' என்ற ஆத்ம விசாரணை செய்வது ஆன்மீகம். ஆன்மீகம் சமயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆன்மா என்பது ஸ்திரமானது, அழிவற்றது.

விஞ்ஞான ரீதியாக, நம் உடலில் V-MAT என்று ஒரு மரபணு உள்ளது. ஆன்மீக நாட்டம் உள்ளவர்களின் உடலில் மட்டுமே இந்த ஜீன் அதிகம் காணப்படும், ஆன்மீக நாட்டம் குறைவாக உள்ளவர்களிடம் இது அவ்வளவாக இருக்காது. இதற்கு God gene என்று மற்றொரு பெயரும் உண்டு.

கே: ஆத்மவிசாரத்தின் மூலம் இறை யருளை அடைவது எப்படி?

ப: ஆன்மா நிரந்தரமானது. அழிவற்றது. ஆன்மீகம் என்பது தங்கச் சுரங்கம். இதனைத் தோண்டிக் கொண்டே போகலாம். 'சரண கமலாயத்தில் அரைநிமிட நேரமட்டும்' என்று அருணாகிரிநாதர் கூறியது போல், நம்மிடம் முழு சரணாகதி இருந்தால் தான் நாம் இறைவனை அடையலாம். சிரமமில்லையேல் லாபமில்லை. இதற்கு என் சொந்த அனுபவமே உதாரணம். என் வாழ்க்கையில் நான் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துள்ளேன். என் உழைப்பினால் ரோல்ஸ்ராய்ஸ் கார், ஒரு கப்பல், அமெரிக்காவின் சிறந்த நகரம் ஒன்றில் பல காண்டோ க்கள் என நிறையச் செல்வங்களுடன் வாழ்ந்தேன். கோவில் கட்டுவது என்று தீர்மானித்தவுடன் இவை அனைத்தையும் விற்றேன். என் சொந்தச் செலவுகள் எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டு என் வீட்டின் பெயரில் கடன் வாங்கினேன். உண்மையில் 1994லிருந்து எனக்கு மருத்துவக் காப்பீடு கூடக் கிடையாது. ஆலயப் பணியில் நான் மட்டுமல்ல இதர இயக்குநர்களும் தியாகம் செய்துள்ளனர். டாக்டர் கிறிஸ்டின் கெஸ்கே, டாக்டர் பீட்டர் டிரிட்டர் ஆகியவர்களும் தமது இல்லங்களை அடமானம் வைத்து ஆலயப் பணிக்குப் பணம் கொடுத்துள்ளனர். நமக்கு விருப்பமான

இறையருளை எளிதே அடையலாம். இந்தக் கொடுத்தல் என்பது பொருள் ரீதியாக மட்டுமல்ல நம் ஆத்மார்த்த சேவையாகவும் இருக்கலாம்.

கே: அப்படியென்றால் தானத்தில் உயர்ந்த தானம் எது?

ப: தானத்தில் சிறந்தது அன்னதானம். அதாவது பிறர் வயிற்றுப் பசியைத் தணித்தல், இதையும்விடச் சிறந்தது ஆன்மப் பசியைத் தணித்தல். ஆன்மப் பசியைத் தீர்ப்பது என்பது பிறர் மத்தியில் நல்லதையே பேசுவது, நல்லதையே செய்வது என்பதுதான். இப்படி நல்லன பேசவும் செய்யவும் நம் எண்ணங் களில் தூய்மை தேவை.

கே: உங்கள் ஆலயத்தில் பிரதான தெய்வம் யார்?

ப: நம் ஆலயத்தில் கணபதி, முருகன், ஐயப்பன், குருவாயூரப்பன், நவக்கிரகம், பாலாஜி என்ற பல கடவுளர்களுக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன. பிரதான தெய்வம் கருமாரியம்மன். கருமாரி என்பதே ஒரு மந்திரம் ஆகும். இதில் 'க' என்பது பிரம்மா-சரஸ்வதியைக் குறிக்கும். 'ரு' என்பது ருத்ரா-ருத்ராணி; 'மா' என்பது மகாவிஷ்ணு-மகாலட்சுமி; 'ரி' என்பது ஹ்ரீம்காரத்தைக் குறிப்பது. நம் மனதின் சக்தியான மனோன் மணியை இயக்குவதே இந்த ஹ்ரீங்காரம்தான். இதற்கு மற்றொரு பெயர் ஸ்பந்தம். அதாவது உயர்ந்த ஆன்மிகத் துடிப்பு. மேலும் பழநி மலையில் காணப்படும் போகர் சித்தரும் நம் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் சூட்சும ரீதியில் அம்பாள் சின்னமஸ்தா வடிவிலும் (அம்மனின் தசமகா வித்யாக்களில் ஒருவர்) 'பிரத்யட்ச தேவதை' வடிவிலும் 'நாக தேவதை' வடிவிலும் நம் ஆலயத்தில் உயிரோட்டமுடன் இருப்பதை நான் அறிவேன். இங்கு மகரிஷி விஸ்வா மித்திரரின் அருள் உண்டு. இவ்வாண்டு ஜூன் மாதம் திருமலை-திருப்பதி தேவஸ் தானத்தின் உதவியுடன் வெங்கடேஸ்வரர் பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார், போக ஸ்ரீநிவாசர் ஆகிய தெய்வங்களின் பிரதிஷ்டை விமரிசையாக நடைபெறவுள்ளது. 'போக ஸ்ரீநிவாசர்' தம் பெயருக்கேற்ப அனைத்து போகங்களையும் (செல்வங்களையும்) அளிக் கக்கூடிய ஸ்ரீநிவாசரின் அம்சம்.
கே: மருத்துவரான நீங்கள் மெடா ஃபிசிக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: மெடாஃபிஸிக்ஸ் என்பது விஞ்ஞானத் துக்கு அப்பாற்பட்டது. விஞ்ஞானத்தில் ஐந்து பரிமாணங்கள் உள்ளன. பார்த்தல், அளத் தல், கேட்டல், தொடல், சுவைத்தல் ஆனால் மெடாஃபிசிக்சிலோ நமக்கு ஏற்படும் அனுபவங்கள் இக்கோட்பாடுக்குள் அடங்கா தவை. அவற்றை அனுபவிக்கத்தான் முடியும். அளக்க முடியாது. விஞ்ஞானத்தில் முன்னேற் றங்கள் வரவர மாற்றங்களும் வந்து கொண்டி ருக்கும். மெடாஃபிசிக்ஸ் அனுபவம் ஏற்பட் டால் அதில் மாற்றங்கள் இராது. பித்தகோரஸ் தன் கண்டுபிடிப்பை ஒரு மந்திரமாகக் கேட் டார். அதனை மியூசிக் ஆஃப் ஸ்பியர்ஸ் என்று அழைத்தார்.

கே: ஆலயத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணி என்ன?

ப: பலிபீடம், துவஜஸ்தம்பம், ராஜகோபுரம் கட்ட வேண்டும். பலிபீடத்தின் தத்துவம் வாழ்க்கையில் தியாகம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. துவஜஸ்தம்பம் என்பது நம் குண்டலினியின் பிரதிபலிப்பே. அதைப் பார்க்கும் போதெல்லாம் நம் குண்டலினியைத் தட்டியெழுப்பி உயர்நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.

கே: இறைவனை அணுகுவது எப்படி?

ப: நாம் இறைவனைப் பல விதங்களில் அணுகலாம். அவற்றுள் ஒன்று பூஜை. அதா வது இறைவனிடம் பேசுவது. இந்தச் செயல்முறையில் நம் தரப்பில் ஏதேனும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்த நிலை தியானம். இதில் நாம் மெளனம் சாதித்துக் கடவுளின் பேச்சைக் கேட்க இயலும்.

கே: மெளன விரதம் தேவைதானா?

ப: 'சும்மாயிரு சொல்லற என்றலும் அம்மா பொருளொன்றும் அறிந்திலனே' என்ற அருணகிரியின் கூற்றுக்கேற்ப, வாரத்தில் ஒரு முறையாவது மெளன விரதத்தைக் கடைப் பிடித்தல் நன்று. மெளனம் சாதித்து தியானத் தில் இறங்கும்போது, நம் பிராண சக்தியை மீண்டும் பெறலாம். தெளிவும் பொலிவும் கிடைக்கும்.

கே: எளிமையான யோகப்பயிற்சி ஒன்று சொல்லுங்களேன்?

மனிதன் கடைப்பிடிக்க கூடிய மிக எளிமையான யோகப்பயிற்சி 'கர்ம யோகம்'. அதாவது செய்யும் தொழிலே தெய்வம் என்று பாவித்து எதைச் செய்தாலும் செம்மையாகச் செய்வது.
ப: மனிதன் கடைப்பிடிக்க கூடிய மிக எளிமையான யோகப்பயிற்சி 'கர்ம யோகம்'. அதாவது செய்யும் தொழிலே தெய்வம் என்று பாவித்து எதைச் செய்தாலும் செம்மையாகச் செய்வது. கடனே என நினைக்காமல் மன நிறைவோடும் திறமையாகவும் முழுமையாகவும் செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்காமல் செய்ய முடிந்தால் இன்னும் விசேஷம். கூடவே நேரம் கிடைத்தால் ஐந்து நிமிடமாவது பிராணாயாமம் செய்தல் நன்று. காயத்ரி மந்திரம் சொல்வதும் நல்லது. காயத்ரி மந்திரத்தில் ஒரு விசேஷம், அதில் எந்த தெய்வத்தின் பெயரும் இல்லை. அதன் பொருள் 'மூன்று நிலைகளையும் கடந்த ஒளிமயமான உன்னை நான் ஆராதிக்கிறேன், எமது அறிவைத் தூண்டுவாயாக' என்பதே ஆகும். விஞ்ஞானபூர்வமாகப் பிராணயாமம் செய்யும் போதும் சரி, காயத்ரி மந்திரம் சொல்லும் போதும் சரி நம் சுவாசக்குழாயில் நல்ல காற்று உட்சென்று நம் சுவாசப்பைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. நம் மனக்கிலேசங் கள் நீங்கி மனம் குவிகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் உதவுகிறது.

கே: தன்னிடம் எதிர்மறை சக்தி (நெகடிவ் எனர்ஜி) இருப்பதை ஒருவன் எப்படி உணர முடியும்? இதனைச் சரி செய்வது எப்படி?

ப: நமக்குள்ளேயே அசுர குணங்களும் உள்ளன. சாத்வீக குணங்களும் உள்ளன. காமம், குரோதம், மாத்சர்யம் இவை யாவுமே நெகடிவ் எனர்ஜிதான். நம்மிடம் வெறுப் புள்ளதா, அநீதியை நோக்கி அவ்வெறுப்பைச் செலுத்த வேண்டும். கோபம் உள்ளதா இறையருள் வேட்கையில் கோபத்தைக் காட்டலாமே. குரோதம் உள்ளதா அநியாயங் கள் நடக்கும் தறுவாய்களில் குரோதத்தைத் திசைதிருப்ப வேண்டும். அறியாமை என்பதே நம்மை ஆட்கொள்ளும் பெரிய அசுர குணம். நம்மிடமுள்ள பலங்களை அறிந்து கொண்டு அறியாமையை முறியடிக்க வேண்டும்.

கே: தற்கால மனிதன் எதை நோக்கிச் செல்கிறான்?

ப: தற்கால மனிதன் உணர்தலில் இன்னும் பெரிய நிலையை நோக்கியே செல்கிறான். காலச் சக்கரமும் வேகமாகவே சுழல்கிறது. சுய உணர்தல் அதிகரிக்கும் பொழுது மனிதனின் தேவத்தன்மைகள் மட்டுமல்ல அசுர பலங் களும் அதிகரிக்கும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போர்களும் பிரச்சினை களும் இதற்கு உதாரணம். இந்த அசுர குணங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதுவே மனிதனுக்குப் பெரிய சவாலும்கூட.

கே: இளைஞர்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?

ப: இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. நீங்கள் எதைச் செய்தாலும், சிரத்தையுடன் முழு கவனத்துடன் செய்யுங் கள். சினிமா பார்த்தாலும் சரி, விளையாட்டில் ஈடுபடும்போதும் சரி, அதில் மட்டுமே குறியாக இருங்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால் உங்கள் செயல்கள் அனைத்தை யும் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்தே செய்யுங்கள். அதில் வெற்றியோ தோல்வியோ உங்கள் சொந்தப் பொறுப்பாக ஏற்காமல் இறைவனிடம் ஒப்படைத்தால் உங்களுக்கு வேண்டிய சக்தியை இறைவன் கொடுப்பார். உங்கள் ஆன்மா உயர்நிலை அடையும்.

கே: சக்தி வழிபாடு பற்றிக் கூறுங்கள்...

ப: ஒருகாலத்தில் உலகின் எல்லா சமயங்களிலும் சக்தி வழிபாடு நிலவியது. பழம் பெரும் நாகரிங்களான சுமேரியர், மெஸொ பொடோ மியர், பாபிலோனியர், எகிப்தியர் இஷ்டார், சோஃபியா (நம் சரஸ்வதியின் அம்சம்), ஐஸிஸ் என்று பெயர்கொண்ட பெண் தெய்வங்களை வணங்கி வந்தனர். யூதர்கள் ஆதிகாலத்தில் ஷகினா என்ற சக்தியை வழிபட்டனர். ஆனால் அன்று முதல் இன்று வரை சக்தி வழிபாடு தொடர்வது இந்திய கலாசாரத்தில் மட்டும்தான். ஓரளவுக்கு கிறித்தவர்கள் அன்னை மேரியை வழிபட்டாலும் சக்திக்குப் பிரதான இடம் கொடுத்து வருவது இந்து சமயம் மட்டுமே. பராசக்தி கோவிலின் மகிமையை அங்கு நாடிச் செல்லும் பக்தர்களின் வாயிலாகக் கேட்டறியலாம். மகப்பேறு இல்லாதவர் களுக்குக் குழந்தை வரம், வேலை சரியாக அமையாதவர்களுக்கு நல்ல வேலை. பிணி யில் வாடுபவர்களுக்குப் பிணி நிவாரணம் என அற்புதங்கள் பல நடத்தும் தெய்வமாக அன்னை பராசக்தி இருக்கிறாள்.

ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். டெக்ஸாசில் வாழும் ஒரு அன்பர் குடும்பத்தில் பல பிரச்சினைகள். முன்பின் பராசக்தி கோவிலைப் பற்றி அறியாதவர் அவர். ஒருநாள் திடீரென இவரது இமெயிலில் அன்னை பராசக்தியின் உருவப்படமும் கோவிலின் விலாசமும் வந்ததாம். அதை வைத்துக்கொண்டு கோவில் இருப்பிடத்தை அறிந்து அன்னையை வழிபட்டு பல கஷ்டங் களுக்கு விடிவும் கண்டுள்ளார். இம்மகிமை யைத் தம் கைப்பட விவரித்துக் கடிதம் ஒன்றைக் கோவில் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். கடவுள் நம்பிக்கையே நன்மருந்து.

பல வருடங்களாக மாதந்தோறும் 'தென்றல்' பிரதிகள் பராசக்தி கோவிலில் கிடைக்கப் பெற்று வருகின்றன. டாக்டர் குமாரின் ஆன்மீக, மருத்துவ நற்பணிகள் தழைக்க வாழ்த்தி விடைபெறுகிறோம்.

சந்திப்பு: காந்தி சுந்தர்
More

பலகுரல் பாடகர் ஐங்கரன்
டாக்டர் சி.சந்திரமௌலி
Share: 
© Copyright 2020 Tamilonline